தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு பற்றிய குறிப்புகள்
.png)
- கடிதம் என்பதற்கு மடல், முடங்கல் என்ற வேறு பெயர்களும் உண்டு.
- செய்தியைச் சொல்லி அனுப்புவது தூது; எழுதி அனுப்புவது கடிதம்.
- முற்காலத்தில் பனை ஓலையை எழுதுவதற்குப் பயன்படுத்தினர். அக்காலத்தில் பனை முதலியவற்றின் ஓலையை மடல் என்பர். மடலில் எழுதியது மடல் என்றே வழங்கப்பட்டது.
- பண்டைய காலத்தில் செய்தியை ஒலையில் எழுதி மூங்கில் குழாயில் இட்டு அடைத்து அனுப்புவர். மூங்கில் குழாய்க்கு முடங்கல் என்று பெயர். எனவே அது கடிதத்தைக் குறிக்கப் பயன்பட்டது. முடங்கல் என்றால் கடிதம் என்றானது.
- “கடி” என்ற சொல்லுக்கு விரைவு என்பதும் பொருள். ஆங்கிலேயர்கள் காலத்தில் அஞ்சல் முறை வந்தபின் விரைவாகச் சென்று சேர்ந்ததால் கடிதம் எனப்பட்டது.
- எண்ணங்களை வண்ணமுற வடிப்பது கடிதம்.
- தற்காப்புக் கடிதங்கள் (Personal and subjective Letter) தற்சார்பில்லாக் கடிதங்கள் Objective Letter) என இரு வகைப்படும்
- தற்காப்பு கடிதங்கள் இருவருக்கிடையே உள்ள தனிப்பட்ட செய்திகளை உள்ளடக்கியது. அவ் இருவருக்கன்றி மற்றவருக்கு அவற்றால் பயன் இல்லை.
- தற்சார்பு இல்லாக் கடிதங்கள் நாடு, மொழி, இனம், கல்வி, பண்பாடு போன்ற பொதுப்பொருள் பற்றியன. இவை எல்லோருக்கும் எக்காலத்திற்கும் பயன்படும்.
- கருத்தைக் கட்டுரையாகத் தருவதை விடக் கடிதமாக எழுதினால் அதில் ஈடுபாடும் சுவையும் அதிகாமாகிறது. முன்னால் நின்று சொல்வதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
- எழுத்தாளர்கள் இதனை ஓர் உத்தியாகக் கொண்டு கடிதங்கள் எழுதினர். அது “கடித இலக்கியம்” எனப்படுகிறது.
- கடித இலக்கியத்தில் புகழ் பெற்றோர் :
- ஆங்கிலம் :- வில்லியம் கூப்பர், கிரே, வால்போல், செஸ்டர் பீடு
- லத்தீன் :- சிசரோ
- ஜெர்மன் :- ஹில்லர்
- பிரெஞ்சு :- மதாமெதெசெவிஞ்
- நேரு தன்மகள் பிரியதர்சினிக்கு (இந்திரா) எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. “உலக வரலாறு” என்ற பெயரில் வெளிவந்தது.
- விவேகானந்தர், காந்தியடிகள் எழுதிய கடிதங்களும் உள்ளன.
- தமிழில் சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதம் குறிப்பிடத்தக்கது. அவ்விருவருக்கும் உரிய தனிப்பட்ட கடிதம் என்றாலும் அது கோவலன் தந்தைக்கு எழுதியதைப் போன்றும் மிளிர்கிறது.
- 11-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள திருமுகப்பாசுரம், சிவபெருமான் சேரலன் என்ற மன்னனுக்குப் பாணபத்திரன் மூலம் கொடுத்தனுப்பிய கடிதமாகும்.
- மறைமலையடிகள் எழுதி “கோகிலாம்பாள் கடிதம்” புனைகதையாகும்.
- பாரதியார் பரலி.சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்கள், வ.உ.சி. கடிதங்கள், ரசிகமணி கடிதங்கள், புதுமைப்பித்தன் கடிதங்கள், தேவநேயப் பாவணர் கடிதங்கள் போன்றன உள்ளன.
- அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என மு.வ. எழுதிய கடிதங்கள் வாழ்வியல் சிக்கலைத் தீர்க்கும் சிந்தனை கொண்டவை.
- கடித இலக்கியத்திற்கு கால்கோள் செய்தவர் மு.வ. கட்டிடம் எழுப்பியவர் அண்ணா.
தலைவர்களின் கடிதம்
No comments:
Post a Comment