ஆறறிவு கொண்ட மனிதர்களான நம்மை மற்ற உயிரினங்களுக்கு எத்தனை அறிவு உள்ளது என்பதை பட்டியலிடச் சொன்னால் நிச்சயம் தடுமாறவே செய்வோம். சாதாரணமான விஷயங்கள் எப்போதுமே நம்மை முட்டாளாக்கிவிடக்கூடியவை. எனவே எந்த ஒரு விடயமானாலும் சரி.. அவற்றை கவனமாக படித்தறிந்துகொள்வதன் மூலம் டி.என்.பி.எஸ்.சி IV குரூப் தேர்வில் மட்டுமல்ல..
ஐ.ஏ.எஸ் தேர்வுகள் முதல் ஐ.பி.எஸ் தேர்வுகள் அனைத்திற்குமே பயன்படும். எனவே எந்த ஒரு விடயத்தையும் "இது முக்கியம்.. இது முக்கியமல்ல.." என்ற பாகுபடுத்தி படிக்கும் பழக்கத்தை கைவிட்டு, அனைத்துமே முக்கியமானதுதான் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும்.
ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களின் பட்டியலை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
- ஓரறிவு கொண்ட உயிரினங்கள்: மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற தாவர இனங்கள்.
- ஈரறிவு கொண்டு உயிரினங்கள்: நத்தை, சங்கு (இதற்கு உடல், வாய் ஆகிய இரண்டு உறுப்புகள் மட்டுமே உள்ளது.)
- மூவறிவு: எறும்பு, கரையான், அட்டை
- நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு
- ஐயறிவு: விலங்குகள், பறவைகள்
- ஆறறிவு: மனிதர்கள்
2 Comments
Good information.
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDelete