TNPSC குரூப் 5A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று TNPSC அறிவிப்பு!!
தமிழகத்தில் TNPSC குரூப் 5A தேர்வு முடிவுகள் 7 மாதங்களாக வெளியிடாமல் இருக்கும் நிலையில் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவு:
தமிழகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான குரூப் 5A தேர்வு கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், குரூப் 5A தேர்வுக்கு 1114 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், தேர்வாளர்களுக்கு மே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு முடிந்து 7 மாதங்கள் ஆகியும் குரூப் 5A தேர்வு முடிவுகள் குறித்து TNPSC எந்த அறிவிப்பையும் வெளியிடாத காரணத்தினால் தேர்வாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்க துவங்கி உள்ளனர்.
.jpg)
No comments:
Post a Comment