தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு குறிப்புகள்.

TNPSCGK Editorial Team
0

TNPSC Group 4 exam tips:

TNPSC GROUP 4 தேர்வுக்கு தயாராபவர்கள் முதலில் பள்ளிப்பாடப் புத்தகங்களை படித்திடல் வேண்டும். அதில் கேட்கப்படும் வினாக்கள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தினையும் ஒன்று விடாமல் படித்து அதன் பிறகு அதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடத்தினையும் முடித்தப்பிறகு, அங்கு கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை எழுதி, விடை எழுதி பயிற்சி பெற வேண்டும். குறிப்பாக பழைய டிஎன்பிஎஸ்சி வினாத்தாட்களை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். 


அந்த வினாத்தாட்களுக்கு OMR Sheet Xerox காப்பி பதிவிறக்கம் செய்து, பிரிண்டு அவுட் எடுத்துக்கொண்டு, அதில் வினாக்களை நிரப்பி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 


ஒரு தேர்வு எப்படி நடக்குமோ அதுபோன்று நினைத்துக்கொண்டு, உங்களிடம் உள்ள வினாத்தாட்களுக்கு , உங்களுக்குத் தெரிந்த விடைகளை நிரப்பி தேர்வினை வீடிலேயே எழுத வேண்டும். பிறகு வீட்டில் உள்ள நபர்கள் அல்லது நண்பர்கள் மூலம் அவற்றை திருத்தச் செய்ய வேண்டும். ஏற்படும் தவறுகளை அறிய , சரியான விடைகளை கண்டறிய, மனதில் நிறுத்த இந்த முறை நன்றாக உதவும். குறிப்பாக நண்பர்கள் அல்லது வீட்டில் உங்களைப் போன்றே தேர்வுக்கு தயாராகும் சகோதர சகோதரிகளையும் இதுபோன்று செய்யச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். 

அதன் மூலம் tnpsc தேர்வு எப்படி எழுத வேண்டும் என்ற அனுபவம் கிடைக்கும். ஏற்கனவே பழகியிருப்பதால், தேர்வு கூடத்தில் சர்வ சாதாரணமாக தேர்வினை எதிர்கொள்ள முடியும். மனதில் உள்ள பயம் அகலும். நன்றாக ப\யிற்சி பெற்றிருக்கும்போது, விடைகள் தெரிந்த கேள்விகளுக்கு முன்னுரிமை அளித்து பதில் அளிக்க முடியும். 

தேர்வு பயம் விலகினால் தேர்வில் வெற்றி என்பது சர்வ சாதாரணம்தான். 

பயிற்சி பெற்று, தேர்வு எழுதி வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துகள். 


இங்கே  TNPSC குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் சில , பதில்களுடன் பதிவிட்டிருக்கிறோம். படித்துப் பயன்பெறுக. 

1. கர்மநாசா நதிநீர் சர்ச்சை எந்த மாநிலங்களுக்கு இடையில் உள்ளது.


(A) பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான்

(B) ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா

(C) பீகார் மற்றும் உத்திரபிரதேசம்

(D) அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர்

(E) விடை தெரியவில்லை


விடை: (C)


2. அச்சுதநாயர் காலத்தில் விஜயநகர பேரரசு எத்தனை ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?



(A) 15 ராஜ்ஜியங்கள்

(B) 16 ராஜ்ஜியங்கள்

(C) 17 ராஜ்ஜியங்கள்

(D) 18 ராஜ்ஜியங்கள்

(E) விடை தெரியவில்லை


விடை: (C)


DRDO Recruitment 2022: 80 ஆயிரம் சம்பளத்தில் இளைஞர்களுக்கு பொன்னான வேலை வாய்ப்பு; அப்ளை லிங்க் உள்ளே!


3. பானிபட் போரில் பாபரின் இராணுவத்தில் இருந்த தலைசிறந்த துப்பாக்கி வீரர் (A) உஸ்தாத் அலி


(B) ஜாஃபர்கான்

(C) ஹூமாயூன்

(D) ஹிண்டால்

(E) விடை தெரியவில்லை


விடை: (A)




4. சிவந்த மண் கற்களால் கட்டப்பட்ட 'லால் கிலா' எனப்படும் கோட்டையைக் கட்டியவர்?


(A) ஜஹாங்கீர்

(B) ஷாஜஹான்

(C) அக்பர்

(D) அவுரங்கசீப்

(E) விடை தெரியவில்லை


விடை: (B)


5. விஜய நகரம் எந்த பெயரில் அழைக்கப்பட்டது?


1. பீஜநகர்

2. விருபாட்ஷபுரம்

3. ஹோஸ்பட்டணம்

4. வித்யாநகரம்



(A) 1 மட்டும்

(B) 2 மட்டும்

(C) 2, 3 மட்டும்

(D) 1, 2, 3, 4

(E) விடை தெரியவில்லை


விடை: (D)


செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் 'சமயம் தமிழ்' பக்கத்தை பின் தொடருங்கள்....


6. கீழ்வருபவற்றுள் அரசரின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை முன்வைத்த முதல் அரசர் யார்?


(A) அலாவுதீன் கில்ஜி

(B) பால்பன்

(C) இல்ட்டுமிஷ்

(D) இரஷியா

(E) விடை தெரியவில்லை


விடை: (B)


7. ஹரப்பன் மக்களால் பயிரிடப்படாத பயிர் எது?


(A) பார்லி


(B) கோதுமை

(C) பஞ்சு

(D) கரும்பு

(E) விடை தெரியவில்லை


விடை: (D)


8. சபாநாயகரால் பாராளுமன்ற அமர்வினை முடிவுக்கு கொண்டு வருதல் ___ ஆகும்.


(A) கலைப்பு

(B) ஒத்திவைப்பு

(C) முடிவுக்கு கொண்டு வருதல்

(D) அழைப்பு

(E) விடை தெரியவில்லை


விடை: (C)


9. தடுப்புக்காவலர் சட்டத்தின்படி மூன்று மாத காலத்திற்கு பிறகு செயல்படுத்த அனுமதிப்பவர் யார்?


(A) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

(B) இந்திய தலைமை வழக்குரைஞர்

(C) தலைமை வழக்கறிஞர்

(D) ஆலோசனைக்குழு

(E) விடை தெரியவில்லை



TNPSC Group 4: இன்றைக்கான குரூப் 4 வினா, விடை இங்கே!


விடை: (D)


10. கீழ்காணப்படும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளில், உச்சநீதிமன்றத்தை குறிப்பவை யாவை?


(A) விதி 36 முதல் 51 வரை

(B) விதி 79 முதல் 123 வரை

(C) விதி 124 முதல் 147 வரை

(D) விதி 12 முதல் 35 வரை

(E) விடை தெரியவில்லை


விடை: (C)


தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் (tnpsc group 4 syllabus 2021 in tamil) மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2 &2A, குரூப் 3, குரூப் 4 என குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top