Sunday, July 23, 2023

குறுந்தொகை பற்றிய குறிப்புகள்

 

குறுந்தொகை பற்றிய குறிப்புகள் 



நூற்குறிப்பு

குறுந்தொகைகுறுமை + தொகை
ஆசிரியர் எண்ணிக்கை205
பாடல் எண்ணிக்கை401 + 1 (கடவுள் வாழ்த்து)
எல்லை4-8
பொருள்அகம்
தொகுத்தவர்பூரிக்கோ
தொகுப்பித்தவர்தெரியவில்லை
கடவுள் வாழ்த்து பாடியவர்பாரதம் பாடிய பெருந்தேவனார்
தெய்வம்முருகன்
  • குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இதில் கடவுள் வாழத்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
  • இந்நூலைத் தொகுத்தவர் . பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்கு கடவுள் வாழத்துப் பாடியுள்ளார். இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
  • இந்நூல் வாயிலாகப் பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.

மேற்கோள்கள் / பாடல்வரிகள் 

9ஆம் வகுப்பு

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

– தேவகுலத்தார்

12 ஆம் வகுப்பு (Old)

யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே

– கபிலர்

திணை குறிஞ்சி
துறை – வரைவு நீட்டிய தலைமகனுக்கு தோழி கூறியது

கபிலர் பற்றி கூறியவர்கள்:

வாய்மொழிக் கபிலன் – கூறியவர்கள் நக்கீரன்
நல்லிசைக் கபிலன் – பெருங்குன்றூர்க் கிழார்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் – இங்கீரனார்
புலன் அழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன் – மாறோக்கத்து நப்பசலையார்

9ஆம் வகுப்பு

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறே.

(பாலை பாடிய பெருங்கடுங்கோ – 37வது பாடல்).

விருந்தை எதிர்கொள்ளும் தன்மை

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”

குறுந்தொகை – 118

  • பழந்தமிழர் வாழ்வினைக் காட்டும் காலக்கண்ணாடி இது.


No comments:

Post a Comment