Wednesday, July 26, 2023

தமிழ் நூல்கள் மற்றும் அவற்றின் வேறு பெயர்கள்

 

தமிழ் நூல்கள் மற்றும் அவற்றின் வேறு பெயர்கள்

💥திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் – திருவள்ளுவ மாலை.
💥திருக்குறள் – வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, முப்பால், வள்ளுவப் பயன், பொய்யாமொழி, தெய்வநூல், உலகப்பொதுமறை, உத்திரவேதம், முப்பால், பொதுமறை, திருவள்ளுவம்
💥சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சிலம்பு, முதல் காப்பியம், சமுதாயக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
💥கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம்,கம்ப நாடகம்.
💥பெரியபுராணம்: – திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம், வழிநூல்,
💥மணிமேகலை – மணிமேகலை துறவு, மணிமேகலை, குண்டலகேசி, பௌத்தக் காப்பியங்கள்
💥சீவகசிந்தாமணி – மணநூல், முக்திநூல், காமநூல், மறைநூல், முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்), இயற்கை தவம், முதல் விருத்தப்பா காப்பியம்
💥இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம்,மணிமேகலை
💥அகநானூறு – நெடுந்தொகை
💥புறநானூறு – புறம், புறப்பட்டு, தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
💥பழமொழி – முதுமொழி, உலக வசனம்
💥பட்டினப்பாலை – வஞ்சிநெடும் பாட்டு
💥கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
💥திருமுருகாற்றுப்படை – புலவராற்றுப் படை
💥பெரும்பானாற்றுப்படை – பாணாறு
💥மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை
💥முல்லைப்பாட்டு – நெஞ்சாற்றுப்படை
💥குறிஞ்சிப்பாட்டு – பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு
💥96 வகை சிற்றிலக்கிய நூல் – சதுரகாதி
💥கிறித்துவர்களின் களஞ்சியம் – தேம்பாவணி
💥இலக்கண விளக்கம் – குட்டித் தொல்காப்பியம்
💥திருவாசகம் – தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
💥64 புராணங்களைக் கூறும் நூல் – திருவிளையாடற் புராணம்
💥பெருங்கதை – அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை
💥பெரிய புராணம் – திருத்தொண்டர் புராணம், வழிநூல், திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம்
💥திருமந்திரம் – தமிழர் வேதம், தமிழ் மூவாயிரம்
💥திருக்கயிலாய ஞான உலா – குட்டித்திருவாசகம்
💥நேமிநாதம் – சின்னூல்
💥நீலகேசி – நீலகேசி தெருட்டு
💥தாயுமானவர் பாடல்கள் – தமிழ் மொழியின் உபநிடதங்கள்
💥இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
💥இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
💥இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்
💥இயற்கை இன்ப வாழ்வு நிலையம் – சிலப்பதிகாரம் /மணிமேகலை
💥பாவைப்பாட்டு – திருப்பாவை
💥குற்றாலக் குறவஞ்சி – குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம்
💥குழந்தை இலக்கியம் – பிள்ளைத் தமிழ்
💥கலித்தொகை – கற்றறிந்தார் ஏற்கும் நூல்
💥நறுந்தொகை – வெற்றி வேட்கை, திராவிட வேதம்,தமிழ் மறை வேதம், திருவாய் மொழி
💥அறவுரைகோவை என்று சிறப்பிக்கப்படும் நூல் – முதுமொழிக்காஞ்சி
💥திருமுருகாற்றுப்படை சிறப்பு பெயர்கள் – புலவராற்றுப்படை
💥முக்கூடற்பள்ளு சிறப்பு பெயர்கள் – உழத்திபாட்டு
💥புறநானூறு சிறப்பு பெயர்கள் – வரலாற்று களஞ்சியம்
💥பதினெட்டு உறுப்புகளை கொண்டு பாடப்பெற்ற நூல் – கலம்பகம்
💥நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் – நாலடியார்
💥தமிழரின் இரு கண்கள் – தொல்காப்பியம் /திருக்குறள்

No comments:

Post a Comment