Wednesday, July 26, 2023

இலக்கணம் மற்றும் இலக்கணத்தின் வகைகள்

 

இலக்கணம் மற்றும் இலக்கணத்தின் வகைகள்

        இலக்கணம் என்பது ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பைப் பிழையில்லாமல் கற்றுக்கொள்வதற்கு தேவையான விதிகளின் தொகுப்பு, இந்த இலக்கண கட்டமைப்பை வரையறுக்கும் விதிகளின் தொகுப்பு என்பது எழுத்து மற்றும் சொல் ஆகும். இது எல்லா மொழிகளிலும் உள்ள பொதுவான இலக்கண விதிகள் ஆகும்.



தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது. அவை,
1. எழுத்துஇலக்கணம் 
2.சொல்இலக்கணம் 
3.பொருள்இலக்கணம் 
4.யாப்புஇலக்கணம் 
5.அணி இலக்கணம் ஆகியவை ஆகும். 
   இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும்.
    பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் இலக்கியத்தின் உள்ளடக்கத்திற்கு இலக்கணம் கூறுவது ஆகும். 
   யாப்பிலக்கணம் என்பது இலக்கியம் எழுதப்படும் செய்யுளின் இலக்கணம் கூறுவதாகும். யாப்பிலக்கணத்தின் ஒரு வளர்ச்சியாகப் பாட்டியல் இலக்கணம் தோன்றியது.
ராபர்ட் கால்டுவெல் (1814–1891): திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து ஆய்வு செய்தவர்.
   பின்வரும் பதிவுகளில் இலக்கணத்தின் வகைகள் பற்றி விரிவாக பயில்வோம்
  

No comments:

Post a Comment