Friday, March 8, 2019

ஒளி மற்றும் ஒலி | டிஎன்பிஎஸ்சி | குரூப் 4 | விஏஓ | பொது அறிவியல் !

ஒளி மற்றும் ஒலி


  • ஒளி   எதிரொளிப்புத்   தளத்தில்  படுகின்ற  ஒளிக்கதிர்   - படுகதிர்
  • பெரிஸ்கோப், கலைடாஸ்கோப்போன்றவற்றின்  தத்துவம்  - பன்முக எதிரொளிப்பு
  • ஒரு  ஒளியின்  அலைநீளம்  நான்கு  மடங்காகக்  குறைந்தால்  அதன் சிதறல் அளவு - 256 மடங்கு அதிகரிக்கும்
  • ஒலியின் மதிப்பு எதனைப் பொறுத்து இருக்கும் - வீச்சு
  • செய்தித்தொடர்புச்  சைகைகளை  அனுப்புவதற்குப்  பயன்படுவது  - ஒளிஇழை
  • வெளவால்கள்  தாம்  பறக்கும்  திசையை  எதனைப்  பயன்படுத்தி அறிகின்றன - மீயொலி
  •  முதன்  முதலில்  வளிமண்டல  மூலக்கூறுகளில்  ஒளிச்சிதறல்  பற்றிக் கூறியவர் - லார்ட் ராலே
  • அணுக்கள்  அல்லது  மூலக்கூறுகள்  மீது  பட்டு  சிதறலடைந்த  ஒளி
  • ஃபோட்டான்களைக் கொண்டு எவற்றை எளிதாக அறியலாம்  -  இராமன் விளைவு
  • இராமன்  நிறமாலை  உதவியுடன்  மூலக்கூறு  அமைப்புகள்  பிரிக்கப்பட்டு ………………… வகைப்படுத்தப்படுகின்றன - தனிமங்கள்
  • மனிதனின்  செவியுணர்  ஒலியின்  அதிர்வெண்  நெடுக்கம்  என்ன  -  20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை
  • ஒளியூட்டப்பட்ட பிளவு போன்ற நேர்ப்போக்கு ஒளி மூலம் உருவாக்கும் அலைமுகப்பு - உருளை வடிவ அலைமுகப்பு
  • நியூட்டன் வளையங்களைப் பயன்படுத்தி திரவத்தின் ………… யை கணக்கிடலாம் - ஒளிவிலகல் எண்
  •  ஈரச்சுப் படிகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக - மைக்கா
  • ஆய்வுக்  கூடங்களில்  தள  விளைவுற்ற  ஒளியை  உருவாக்கப் பயன்படுவது - போலராய்டு
  • கனடா பால்சமின் ஒன்றின் ஒளிவிலகல் எண் - 1.550


No comments:

Post a Comment