டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை வெல்ல தமிழ்பாட குறிப்புகள்!

குரூப் 2 தேர்வுக்கான  மொழிப்பாடக் குறிப்புகளின் தொகுப்புகள் படிக்கவும். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு அவற்றை தொகுத்து கொடுத்துள்ளோம் அவற்றை நன்றாக படிக்கவும்.

ஒரெழுத்து ஒரு மொழி:

தமிழ்  மொழியில் ஒரெழுத்தில் அமைந்துள்ள சொற்கள் மற்றும் பொருள்கள் செயல்களின்  தொகுப்பு கொடுத்துள்ளோம். அவற்றை நன்றாக படிக்கவும்.

ஆ-
பசு, பெற்றம் , மான், எருமை பெண்ணின் இனம், இரக்க குறிப்பு, அதிசய குறிப்பு, வினா இடைச்சொல், ஆவது முடிந்தது, இணக்காமதல், ஒப்பாதல், அமைத்தல், ஆன்மா, ஆச்சாமரம், எதிர்மறை, இடைநிலை, பலவின்பால், எதிர்மறை, வினை முற்று, விகுதி, முறை, விதம், விருத்தி.

ஈ- ஈதல், இரத்தல், படிப்பித்தல், படைத்தல், ஈணுதல், தேர்தல், அதிசய குறிப்பு, தேனீ, வண்டு, வீட்டு ஈ,  இறகு, அழிவு.

ஊ- தசை, இறைச்சி, வினையெச்ச, விகுதி,ஊண்

ஏ- பெருக்கம், அடுக்கு, மேல்நோக்கம், இறுமாப்பு, அம்பு, ஏவுதல், பிரிநிலை, வினா, எண்,  தேற்றம், ஈற்றசை, இசைநிறை, விளிக்கும் குறிப்பு, இகழ்ச்சி குறிப்பு.

ஐ- செல்லாக்க விகுதி, வேற்றுமை உருபு, முன்னிலை ஒருமை, விகுதி, சாரியை, அழகு, வியப்பு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன், அரசன் ஆசான், ஆசிரியை, தந்தை, சகோதரன்

ஒ- சென்று தங்குதல், மதநீர் தாங்கும் பலகை( உயர்வு, இழிவி, மகிழ்ச்சி, இகழ்ச்சி, அழைப்பு, வியப்பு, குறிப்புகள் ,அசைநிலை, புணர்தல்,

வேர்சொல் தேர்வு செய்தல்:
 தனிக்குறிப்பு மட்டுமே வேர்சொல்லாக இருக்கும்.
பொருள் உணர்த்தும் மிகச்சிறிய குறியீடு
ஏவல் வினைமுற்று  வினையாக வரும்.
செல்கிறான்- செல்
தனிக்குறில் ஒற்று குற்றியலுகரம்
வெட்டினான்- வெட்டு
ஒட்டினான்-ஒட்டு
தட்டினான்- தட்டு

இருகுறில்:
படித்தான்- படி
கிழித்தான்- கிழி

இதுகுறில் குற்றியலிகரம்:

விலகினான்- விலகு
பழகினான்- பழகு
புழுகினான்-புழுகு
ஒழுகினான்-ஒழுகு

இதுகுறில் ஒற்று:

வளர்ந்தான் - வளர்
படர்ந்து- படர்
மலர்ந்தான் - மலர்
தளர்ந்தான் -தளர்

இது குறில் குற்றியலுகரம்: 

ஒதுக்கினான்- ஒதுக்கு
உலுக்கினான்-உலுக்கு
பதுக்கினான்-பதுக்கு
குதப்பினான்-குதப்பு
செதுக்கினான்- செதுக்கு
சறுக்கினான்-சறுக்கு
வணங்கினான்- வணங்கு

நெடில் : 

போனான்- போ
வைத்தான்- வை
வந்தான்- வா
தந்தான்- தா
செத்தான்- சா
ஈந்தான்-ஈ

நெடில் குற்றியலுகரம்: 

கூறினான்-கூறு
பாடினான்-பாடு
பேசினான்- பேசு
வாடினன்- வாடு
ஆடினான்- ஆடு

நெடில் ஒற்று:
பார்த்தான் - பார்
வாழ்ந்தான்- வாழ்
பூண்டான் -பூண்

நெடில் ஒற்று குற்றியலுகரம்: 

வாட்டினான்- வாட்டு
சூட்டினான்- சூட்டு
தாக்கினான்-தாக்கு
தூற்றின்னான்- தூற்று

நெடில் ஈற்றொற்று குற்றியலுகரம்: 

வாழ்த்தினான் - வாழ்த்து
போர்த்தினான்- போர்த்து
பாய்ச்சினான்- பாய்ச்சு
காய்ச்சினான்- காய்ச்சு

Post a Comment

0 Comments