நாட்டுப்புற பாடல் ஒரு மதிப்பெண் வினா விடை || TNPSC தமிழ் இலக்கியம்
1. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலை நாட்டுப்புற பாடல் ஆகும்.
2. காதல் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்ட ஒருதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.
3. தொழில் பாடல்கள் ஏற்றப்பாட்டு,ஓடப்பாட்டு.
4. விளையாட்டு பாடல்கள், தாலாட்டு பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புற பாடல்கள் ஆகும்.
5. நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலினை தொகுத்தவர்
சு. சக்திவேல்.
6. குழந்தையை தொட்டிலிட்டு தாய்ப்பாலும் பாட்டு தாலாட்டு பாட்டு.
7. களைப்பு நீங்க வேலை செய்தோர் பாடுவது தொழில் பாடல்.
8. திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது சடங்கு பாடல் அல்லது கொண்டாட்ட பாடல்.
9. சாமி கும்பிடுவோர் பாடுவது வழிபாட்டு பாடல்.
10. இறந்தோருக்கு பாடுவது ஒப்பாரி பாடல்.
11. சென்னை போன்ற பெரு நகரங்களில் பாடுவது கானா பாடல்.
12. தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று.
13. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள்.
14. நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது.
15. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசியுடன் பாடும் பாடல் தாலாட்டு.
No comments:
Post a Comment