Tuesday, August 1, 2023

ஆகுபெயர் மற்றும் அவற்றின் வகைகள் || TNPSC TAMIL

ஆகுபெயர் மற்றும் அவற்றின் வகைகள் || TNPSC TAMIL



1. ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றோன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது?

     Answer: ஆகுபெயர்

2. ஆகுபெயர் மொத்தம் எத்தனை வகைப்படும்?

     Answer: 16வகைப்படும்

3. "முல்லையை தொடுத்தாள்"என்பது எவ்வகை ஆகுபெயர்?

     Answer: பொருளாகுபெயர் (முதலாகுபெயர்)

4. "வகுப்பறை சிரித்தது"என்பது எவ்வகை ஆகுபெயர்?

     Answer: இடவாகுபெயர்

5. "கார் அறுத்தான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

   Answer: காலவாகுபெயர்

6. "மருக்கொழுந்து நட்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

    Answer: சினையாகுபெயர்

7. "மன்சள் பூசினான், என்பது எவ்வகை ஆகுபெயர்?

     Answer: பண்பாகுபெயர்

8. "வற்றல் தின்றான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

       Answer: தொழிலாகுபெயர்

9. "வானொலி கேட்டு மகிழ்ந்தனர் என்பது எவ்வகை ஆகுபெயர்?

      Answer: கருவியாகுபெயர்

10. "பைங்கூல் வளர்ந்தது என்பது எவ்வகை ஆகுபெயர்?

      Answer: காரியவாகுபெயர்

11. 'அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன் என்பது எவ்வகை ஆகுபெயர்?

     Answer: கருத்தாவாகுபெயர்

12. "ஒன்று பெற்றால் ஒளிமயம் என்பது எவ்வகை ஆகுபெயர்?

    Answer: எண்ணலளவை ஆகுபெயர்

13. அரை லிட்டர் வாங்கு"என்பது எவ்வகை ஆகுபெயர்?

    Answer: முகத்தலளவை ஆகுபெயர்

14. ஐந்து மீட்டர் வெட்டினான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

     Answer: நீட்டலளவை ஆகுபெயர்


No comments:

Post a Comment