Saturday, August 12, 2023

எட்டாம் வகுப்பு இயல் இரண்டு இலக்கணம் || tnpsc group4

 எட்டாம் வகுப்பு இயல் இரண்டு இலக்கணம் || tnpsc group4 

8th tamil iyal 2


1. ஒன்றின் செயலை குறிக்கும் சொல்? வினைச்சொல்.

2. பொருள் முற்றுப்பெற்ற வினைச் சொற்களை எவ்வாறு அழைப்பர் ? முற்றுவினை அல்லது வினைமுற்று

3.வினைமுற்று எத்தனை வகைப்படும் ? இரண்டு அவை தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று

4. ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம் ,செயல் ,காலம், செய்பொருள் இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது ? தெரிநிலை வினைமுற்று

5. காலத்தை வெளிப்படையாக காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று ? குறிப்பு வினைமுற்று எனப்படும்

6.ஏவல் வினைமுற்று- ஒரு செயலை செய்யுமாறு ஏவும் வினைமுற்று

7.வியங்கோள் வினைமுற்று - வாழ்த்துதல் வைத்தல் விதித்தல் வேண்டல் ஆகிய பொருள்களில் ஒரு வினைமுற்று செங்கோள் வினைமுற்று 

8.ஏவல் வினைமுற்று எவ்விடத்தில் வரும் ? முன்னிலையில்

9.விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று எந்த இடத்தில் வராது ? தன்மை

10.மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரில் உள்ள வினைமுற்று ?மேய்ந்தது

11.பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று? படித்தான், நடக்கிறான், உண்பான் ,ஓடாது.

12.பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்று சொல்? செல்க ,ஓடு, வாழ்க, வாழிய.

13.தொடர்கள் பொருள் அடிப்படையில் எத்தனை வகைப்படும் ?நான்கு

14.ஒரு செய்தியை தெளிவாக கூறும் தொடர்? செய்தி தொடர்

15.ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் ?வினா தொடர்

16.வேண்டுதல், வாழ்த்துதல் ,வைத்தல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்? விழைவு தொடர்

17.உவகை, அழுகை ,அவலம், அச்சம் முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர்? உணர்ச்சித் தொடர்

18.நீ எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறாய் ?வினா தொடர்

19.பாரதியார் பாடல்களின் இனிமை தான் என்னே! உணர்ச்சித் தொடர்

20.கடமையைச் செய் -விளைவுத் தொடர்

21.முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள் செய்தித் தொடர்


No comments:

Post a Comment