Thursday, August 3, 2023

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் TNPSC GROUP1 முதன்மை தேர்வுக்கான HALL TICKET வெளியீடு!!!


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் TNPSC GROUP1 முதன்மை தேர்வுக்கான HALL TICKET வெளியீடு!!!



ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-I) விரிந்துரைக்கும் வகை) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு 10.08.2023 (முற்பகல்) முதல் 13.08.2023 (முற்பகல்) வரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 16/2022, நாள் 21.07.2022 - இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-I) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 10.08.2023 (முற்பகல்) முதல் 13.08.2023 (முற்பகல்) வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in. www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment