how to prepare for tnpsc exam - tips - Syllabus - Guides (Video )
டிஎன்பிசி தேர்விற்கு எப்படி தயார் ஆவது என்பது குறித்து சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் வீடியோவை இங்கு பதிவேற்றம் செய்துள்ளோம். இதில் tnps தேர்வுக்கு எந்த பாடங்களை படிப்பது? எந்த வகுப்பு பாட புத்தகங்களை தேர்விற்கு எடுத்து படிப்பது? எந்தெந்த பாடப் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்? எந்தெந்த பாடப்பிரிவுகளில் முக்கியமான கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்ற விபரங்கள் என மிகத் தெளிவாக இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையிலேயே இலவசமாக கிடைக்கும் இதுபோன்ற வீடியோக்களில் பல பயன் மிக்க தகவல்கள் அடங்கியுள்ளன. அந்த வீடியோவில் குறிப்பிட்டது போல ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை தாங்களே தயார் செய்து கொள்ளும் பொழுது டிஎன்பிஎஸ்சி மட்டுமல்ல.. எந்த ஒரு அரசுத்துறை நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் நீங்கள் மிகச் சுலபமாக வெற்றி இலக்கை அடைந்து தேர்வில் வெற்றி பெற்று நல்லதொரு அரசு வேலைவாய்ப்பை பெறலாம் என்பது உறுதி.
முழுக்க முழுக்க தகவல்களைத் தேடிப் பெறுவதும் பெற்ற தகவல்களை படித்து மனதில் நிறுத்தி வைப்பதும், அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி பார்த்து எழுதிப் பார்ப்பதும் தான் உண்மையாகவே போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு உரிய சூட்சம மந்திரம் ஆகும்.
இதுபோன்று உங்களை நீங்களே தயார் செய்து கொண்டால் உங்களுக்கு போட்டியாளர் நீங்கள் மட்டுமே என்பது உண்மை. மற்றவர்களை பார்த்து அவர் அப்படி படிக்கிறார், இவர் இப்படி தயாராகிறார், நாமெல்லாம் அரசு பணிக்கு தகுதியானவர் தானா? நமக்கெல்லாம் அரசு பணி கிடைக்குமா? என்ற தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் தயவு செய்து அந்த எண்ணங்களை உடைத்து எறிந்து,
உங்களுக்கான வெற்றிப் பாதை காண வழிகளை இது போன்ற இலவசமாக கிடைக்கும் வீடியோக்கள் மட்டும் படத்தொகுப்புகள், ஸ்டடி மெட்டீரியல் போன்றவற்றை தேடி கண்டுபிடித்து அவற்றைப் படித்து நினைவில் நிறுத்தி மாடல் எக்ஸாம் எனப்படும் தேர்வுகளை எழுதி பார்ப்பதன் மூலமும் உங்களை நீங்களே மெருகேற்றி ஒரு போட்டித் தேர்விற்கு தயாராகி வெற்றியாளராக மாறுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு தோன்றும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதோ டிஎன்பிஎஸ்சி க்கு எப்படி எல்லாம் தயாராக நாம் உழைக்க வேண்டும் என்பது குறித்து அருமை நண்பர் பாலா அவர்கள் இந்த வீடியோவில் விளக்கி உள்ளார். பார்த்து கற்று பயன்பெறுங்கள். நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment