முழக்கங்கள் மற்றும் முக்கிய தலைவர்கள்
வணக்கம் நாம் இங்கு தமிழில் தமிழ் நாடு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வான டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தயாராகும் வகையில் உதவக்கூடிய தகவல்களை இங்கு திரட்டி கொடுத்துக்கொண்டு உள்ளோம். அந்த வகையில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள், போராட்டத்தின் போது மக்களை எழுச்சி பெற வைக்க அவர்கள் பயன்படுத்திய முழக்கங்கள், இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சக்தி வாய்ந்த அந்த வார்த்தைகளை அந்த தலைவர்கள் வாயிலாக வெளிப்படுத்தும் பொழுது மக்கள் வெகுண்டிலிருந்து புரட்சி உணர்வு கொண்டு சுதந்திர தாகம் எடுக்க அவர்களும் அந்த வார்த்தைகளை கோஷம் போட்டு தலைவர்களுடன் சுதந்திரத்திற்காக போராடி தோள் கொடுத்துள்ளனர். அத்தகைய சக்தி வாய்ந்த முழக்கங்கள் இங்கு எந்த தலைவரால் எந்த முழக்கம் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நிச்சயமாக தேர்வுக்கு உதவும் வகையில் இத்தகைய தகவல்கள்தகவல்கள் கேள்வி பதில்களாக இங்கு உள்ளன. படித்து பயன்பெறவும். மிக்க நன்றி.
1.செய் அல்லது செத்து மடி என்று.கூறியவர்.யார்?
காந்தியடிகள்
2.கற்பி ஒன்றுசேர் புரட்சி செய் என்று கூறியவர் யார்?
அம்பேத்கர்
3.இந்தியா இந்தியர்களூக்கே என்று கூறியவர் யார்?
தயானந்த சரஸ்வதி
4.வறுமையே வெளியேறு என்று முழக்கமிட்டவர் யார்?
இந்திராகாந்தி
5.டெல்லி சலோ என்று கூறியவர் யார்?
நேதாஜி
6.இன்குலாப் ஜிந்தாபாத் என்று கூறியவர் யார்?
பகத்சிங்
7.இரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை தருகிறேன் என்று கூறியவர் யார் ??
நேதாஜி
8.சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீருவேன் என்று கூறியவர்.யார்???
பால கங்காகதர திலகர்
இப்படி ஒவ்வொரு தலைவரும் தனக்கென தனித்துவம் வாய்ந்த ஒரு முழக்கங்களை எழுப்பி மக்களை விழிப்புணர்வுடன் இருக்க செய்ததோடு சுதந்திர தாகத்தையும் அவர் அடிமனதில் ஆழப் பதியும் வண்ணம் ஏற்படுத்தினர்.
No comments:
Post a Comment