எட்டாம் வகுப்பு இயல் 4 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 1
1."கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்" என்ற அடிகளை இயற்றியவர் குமரகுருபரர்.
2. கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியை அழகு தரும் என்று கூறியவர் குமரகுருபரர்.
3. குமரகுருபரர் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்.
4. குமரகுருபரர் இயற்றிய நூல்கள்
கந்தர் கலிவெண்பா,
கயிலை கலம்பகம்,
சகலகலாவல்லி மாலை ,
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் ,
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்.
5. மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுற்றுவதால் இந்த நூல் எவ்வாறு அழைக்கப்படுகிறது நீதிநெறி விளக்கம்.
6. நீதிநெறி விளக்கம் நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் உள்ளன.
7. கல்வி கரையில கற்பவர் நாள் சில என்ற அடிகள் இடம் பெற்ற நூல் நாலடியார்.
8. கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு என்று கூறியவர் ஆலங்குடி சோமு.
9. ஆலங்குடி சோமு பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் ஆலங்குடி.
10. ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
11. ஆலங்குடி சோமு திரைப்பட பாடல் ஆசிரியராக புகழ்பெற்றவர்.
12. என் நண்பர் பெரும் புலவராக இருந்த போதிலும் அகம்பாவம் இன்றி வாழ்ந்தார்.
13. கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று அது மெய்மையை தேடவும் அறநெறியை பையிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறையாகும் என்று கூறியவர் விஜயலட்சுமி பண்டிட்.
14. ஐநா அவையின் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட்.
15. ஏரென்று கல்வி சிலர் எழுதும் பேசும் இயல் என்று கல்வி பலர் கெட்டால் என்னும் வீடு என்று கல்வி ஒரு தேர்வு தந்து விளைவன்று கல்வி அது வளர்ச்சி வாயில் என்று கூறியவர் குலோத்துங்கன்.
16. திரு.வி.க என்பதன் விரிவாக்கம் திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாண சுந்தரனார்.
17. தமிழ் தென்றல் என்று அழைக்கப்படுபவர் திரு வி க.
18. திரு வி கா எழுதிய நூல்கள்
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
பெண்ணின் பெருமை
தமிழ்ச்சோலை
பொதுவுடமை வேட்டல்
முருகன் அல்லது அழகு
இளமை விருந்து
19. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி.
20. கல்வி பயிற்சிக்குரிய பருவம் இளமை.
21. இன்றைய கல்வி தொழிலில் நுழைவதற்கு கருவியாக கொள்ளப்பட்டு வருகிறது.
22. கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுட்பம்.
23. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுக்கொம்பு போன்றது.
24. வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையா எது காவிய இன்பம் ஆகும்.
25. திரு வி க எந்தெந்த துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்
அரசியல்
சமுதாயம்
சமயம்
தொழிலாளர் நலன்.
No comments:
Post a Comment