எட்டாம் வகுப்பு இயல் 3 இலக்கணம் ஒரு மதிப்பெண் வினா விடைகள் || tnpsc exam
1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம்.
2. எச்சம் இரண்டு வகைப்படும்.
3. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்.
4. பெயரெச்சம் இரண்டு வகைப்படும்.
5. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியும்மாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம்.
6. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம் குறிப்பு பெயரெச்சம்.
7. வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம்.
8. வினையெச்சம் இரண்டு வகைப்படும்.
9. எழுதிய கடிதம் என்பது தெரிநிலை பெயரெச்சம்.
10. சிறிய கடிதம் என்பது குறிப்பு பெயரெச்சம்.
11. எழுதி வந்தான் என்பது தெரிநிலை வினையெச்சம்.
12. மெல்ல வந்தான் என்பது குறிப்பு வினையெச்சம்.
13. ஒரு வினைமுற்று எச்ச பொருள் தந்து மற்றொரு வினைமுற்று கொண்டு முடிவது முற்றெச்சம்.
14. குறிப்பு வினையெச்சம் காலத்தை வெளிப்படையாக காட்டாது.
பொருத்துக
1. நடந்து - முற்றெச்சம் (3)
2. பேசிய - குறிப்பு பெயரெச்சம் (4)
3. எடுத்தனர் உண்டான் - பெயரெச்சம் (2)
4. பெரிய- வினையெச்சம் (1)
உவமை தொடர்கள்
1. மடைதிறந்த வெள்ளம் போல்- தடையின்றி மிகுதியாக
2. உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படை தன்மை.
3. காக்கை உட்கார பணபலம் விழுந்தது போல - எதிர்பாராத நிகழ்வு.
4. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல - தற்செயல் நிகழ்வு.
5. பசு மரத்து ஆணி போல - எளிதில் மனதில் பதிதல்.
6. விரலுக்கு இறைத்த நீர் போல - பயனற்ற செயல்.
7. நெல்லிக்காய் மூட்டையை கொட்டினாற் போல - ஒற்றுமை இன்மை
No comments:
Post a Comment