Wednesday, August 9, 2023

எட்டாம் வகுப்பு பொது தமிழ் இயல் ஒன்று ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 1

 எட்டாம் வகுப்பு பொது தமிழ் இயல் ஒன்று ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 1

8th tamil iyal 1 one liner


1. வானம் அறிந்த அனைத்தும் அறிந்து என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார் ? பாரதியார்

2. பாரதியார் எந்த இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டார் ? இந்தியா, விஜயா

3. பாரதியாரின் உரைநடை நூல்கள் யாவை ? சந்திரிகையின் கதை, தராசு

4.  சிந்துக்கு தந்தை, செந்தமிழ் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மரம் பாட வந்த மறவன் என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார் ?பாரதிதாசன்

5. செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர் காக்கும் நந்தா விளக்கனைய நாயகியே என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

 தூ அரங்கன்

6. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார் ?பாரதியார்

7. மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல் வைப்பு

8. "நிலம் தீ வழி நீர் வீசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" என்ற வரிகளை இயற்றியவர்? தொல்காப்பியர்

9. உயிர் எழுத்து நீண்டு ஒழிப்பதை எவ்வாறு அழைப்பர் ?உயிரளபெடை

10. தொல்காப்பியத்தின் ஆசிரியர் ? தொல்காப்பியர்

11. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகவும் பழமையான இலக்கண நூல் எது ?தொல்காப்பியம்

12. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது அவை யாவை ? மூன்று அவை எழுத்து, சொல் ,பொருள்

13. ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டது ?ஒன்பது இயல்கள்

14. பறவைகள் --------ல் பறந்து செல்கின்றன? விசும்பில்

15. இயற்கையை போற்றுதல் தமிழர் -----? மரபு

16. ஒரு ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை எவ்வாறு அழைப்பர் ? ஒலி எழுத்து நிலை

17. எது தோன்றிய பிறகு தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற்றுள்ளன ?அச்சுக்கலை

18. கல்வெட்டுகளில் காணப்படும் வடமொழி எழுத்து?

19. கல்வெட்டுக்கள் - மூன்றாம் நூற்றாண்டு

20. செப்பேடுகள்- ஏழாம் நூற்றாண்டு முதல்

21. கல்வெட்டுக்கள் செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரி வடிவங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம் ?வட்ட எழுத்து தமிழ் எழுத்து

22. சேரமண்டலம் ,பாண்டிய மண்டலம் பகுதிகளில் காணப்படும் எழுத்துக்கள்? வட்ட எழுத்துக்கள்

23. சோழர்கள் பகுதியில் காணப்படும் எழுத்துக்கள் ?பழைய தமிழ் எழுத்துக்கள்

24. சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?கண் எழுத்துக்கள்

25. கண்ணெழுத்து படுத்த எண்ணுப் பல்பொதி என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல்? சிலப்பதிகாரம்

26. கல்வெட்டில் தமிழ் மொழியின் இருவகை எழுத்துக்களையும் காண இயலும் ?அரச்சலூர் கல்வெட்டு

27. தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் ?தந்தை பெரியார்

28. எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர்? வீரமாமுனிவர்

29. நெட்டெழுத்து இயலும் ஓரெழுத்து ஒரு மொழி என்று கூறியவர் ?தொல்காப்பியர்

30. ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 42 என்று கூறியவர் ?நன்னூலார்

31. காட்டுப் பசுவுக்கு ---- என்று பொருள் 

32. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர்? இரா இளங்குமரனார்

33. தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர்? இரா இளங்குமரனார்

34. எங்கு திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் இரா இளங்குமரனார் அமைத்துள்ளார் ?திருச்சிக்கு அருகில் அல்லூரில்

35. இரா இளங்குமரனார் இயற்றிய நூல்கள் யாவை? இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழின் தனிப்பெரும் சிறப்புகள்




No comments:

Post a Comment