Monday, July 31, 2023

பழந்தமிழர் அறிவியல் சிந்தனை || TNPSC TAMIL NOTES

 பழந்தமிழர் அறிவியல் சிந்தனை || TNPSC TAMIL NOTES



1. அணுவியல் அறிவு

*கூற்று*

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி

*பொருள்*

✓அணுவைப் பிரிக்க இயலும்

*நூல்*

திருக்குறளின் பெருமையை ஒளவையார் சிறப்பித்து கூறிய கூற்று.


2. அணுவியல் அறிவு

*கூற்று*

"ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்"

*பொருள்*

✓நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயர். "கோண்" என்பதாகும்.

*நூல்*

கம்பரின் கூற்று.


3. நீரியல் அறிவு

*கூற்று*

"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்"

*பொருள்*

✓ நீர் மழையாக மண்ணிற்கு வருவதும் ஆவியாகி விண்ணிற்கு செல்வதுமான சுழற்சி கூறப்பட்டுள்ளது.

✓ மழையில்லையேல் புவியின் தட்ப வெப்பநிலை மாறும்.

*பாடல்*

17 -வது திருக்குறள்.


4. மருத்துவ அறிவு

*கூற்று*

"உடம்பார் அழயின் உயிரார் அழிவர்"

*பொருள்*

✓ உடம்பைப் பேண வேண்டியதன் அவசியம் கூறப்பட்டுள்ளது.

*நூல்*

திருமந்திரம் (திருமூலர்)


5. மருத்துவ அறிவு

*கூற்று*

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை

யான்கண் படின்"

*பொருள்*

✓தமிழ் மருத்துவத்தின் தொன்மை கூறப்பட்டுள்ளது.

*நூல்*

217 - வது திருக்குறள்.


6. மருத்துவ அறிவு

*கூற்று*

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்"

*பொருள்*

✓ இயற்கை மருத்துவம் பழந்தமிழகத்தில் இருந்தது.

*நூல்*

திருக்குறள் - 942 ஆம் குறள்.


7. அறுவை மருத்து அறிவு

*கூற்று*

"உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்தன் உதிரம் ஊற்றி அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்"

*பொருள்*

✓ அறுவை மருத்துவம் பழந்தமிழகத்தில் இருந்தது.

*நூல்*

கம்பரின் கூற்று.


8. பரிணாம வளர்ச்சி அறிவு

*கூற்று*

"புல்லாகி பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் "

"ஐயா" என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!

*பொருள்*

✓ ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள பரிணாம வளர்ச்சி கூறப்பட்டுள்ளது.

*நூல்*

திருவாசகம்.


9. கருவியல் அறிவு

*கூற்று*

"மானடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி

செருவினில் பிழைத்தும்"

*பொருள்*

✓ கருவளர்ச்சி பற்றி கூறிகிறது.

*நூல்*

திருவாசகம்.



No comments:

Post a Comment