Sunday, July 30, 2023

பாண்டியர்களுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் இத்தனை கேள்வி இருக்கா !! TNPSC EXAM TIPS


பாண்டியர்களுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் இத்தனை கேள்வி இருக்கா !! TNPSC EXAM TIPS



1. பாண்டியர்களின் தலைநகரம் எது?

      Answer மதுரை 

2. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் எது?

     Answer: திருநெல்வேலி 

3. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி "என்று கூறியவர் யார்?

     Answer: திருஞானசம்பந்தர் 

4. "தன்பொருநைப் புனல் நாடு" என்று கூறியவர் யார்?

      Answer: சேக்கிழார் 

5. திருநெல்வேலி மாவட்ட பகுதியில் சிறப்புமிக்க எந்த மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டது? 

       Answer: பொதிகை 

6. முற்காலத்தில் திருநெல்வேலி ----- என்னும் பெயரும் இருந்துள்ளது?

      Answer: வேணுவனம் 

7. வேணுவனம் என்பதன் பொருள் என்ன?

     Answer: மூங்கில் காடு

8. "பொதியி லாயினும் இமய மாயினும்" என்று பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்து பாடியவர் யார்? 

    Answer: இளங்கோவடிகள் 

9. இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் எந்த மலை புகழ்பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது?

    Answer: குற்றால மலை

10. குற்றால குறவஞ்சியை இயற்றியது யார்?

    Answer: திரிகூடராசப்பகவிராயர் 

11. "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்" என்று குற்றால மலைவளத்தை பாடியவர் யார்?

     Answer: திரிகூடராசப்பகவிராயர் 

12. திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்க செய்யும் ஆறு எது?

    Answer: தாமிரபரணி 

13. தாமிரபரணி நதியை முன்னர் எவ்வாறு அழைத்தனர்?

      Answer: தண்பொருநை 

14. தாமிரபரணியின் கிளை ஆறுகள் எவை?

       Answer:பச்சையாறு‌ மணிமுத்தாறு சிற்றாறு காரையாறு சேர்வலாறு 

15. திருநெல்வேலி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது எது?

    Answer: விவசாயம் உழவுத் தொழில் 

16. திருநெல்வேலியில் வாழை எங்கு பயிரிடப்படுகிறது?

    Answer: தென்காசி நாங்குநேரி அம்பாசமுத்திரம் ராதாபுரம்

17. தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?

     Answer: திருநெல்வேலி 

18. கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழில் எந்த மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது?

     Answer: திருநெல்வேலி 

19. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த துறைமுகம் எது?

      Answer: கொற்கை 

20. கொற்கையில் நடந்த சிறப்பான தொழில் எது?

     Answer: முத்துக்குளித்தல்

21. தூத்துக்குடியில் எங்கு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது?

     Answer: ஆதிச்சநல்லூர் 

22. "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

     Answer: நற்றிணை

23. "கொற்கையில் பெருந்துறை முத்து" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

    Answer: அகநானூறு 

24. கிரேக்க, உரோமாபுரி நாடுகளை சேந்தவர்களான யவனர்கள் எந்த முத்துக்களை விரும்பி வாங்கி சென்றனர்?

   Answer: கொற்கை முத்து 

25. பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றில் கரையில் அமைத்துள்ள எந்த மாநகரின் அமைப்பு சிறப்பானது?

    Answer: திருநெல்வேலி 

26. நெல்லையப்பர் கோவிலில் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என கூறியவர் யார்?

   Answer: திருஞானசம்பந்தர் 

27. "திங்கள் நாள்விழா மல்கு திருநெல் "எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

    Answer: திருஞானசம்பந்தர் 

28. கவர்ப்புரைத் தெரு என்றால் என்ன?

    Answer: சிறைச்சாலை 

29. மேல வீதியை அடுத்துக் ----- தெரு உள்ளது?

    Answer: கூழைக்கடா தெரு

30. அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    Answer:அக்கசாலை

31. முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி ----- தெரு என்னும் பெயரில் அமைத்துள்ளது?

  Answer:அக்கசாலை

32. தாமிரபரணி ஆற்றில் மேற்கு கரையில் அமைந்துள்ள நகர் எது?

   Answer: திருநெல்வேலி 

33. தாமிரபரணி ஆற்றில் கிழக்கு கரையில் அமைந்துள்ள நகர் எது?

     Answer: பாளையங்கோட்டை 

34. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எது?

      Answer: பாளையங்கோட்டை 

35. நெல்லை நகரின் மேற்கே உள்ள ஊர் எது?

     Answer: பேட்டை

36. வணிகம் நடைபெறும் பகுதியை ----- என வழங்குதல் பண்டைய மரபு ஆகும்?

    Answer: பேட்டை

43. அகத்தியர் எங்கு வாழ்ந்தார்?

      Answer: பொதிகை 

44. திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்த புலவர்கள் யாவர்?

     Answer: திரிகூடராசப்பகவிராயர் நம்மாழ்வார் பெரியாழ்வார் குமரகுருபரர் மறக்கோத்து நப்பசலையார்

45. திருநெல்வேலியில் தமிழின் பால் ஈர்த்து அயல்நாட்டு அறிஞர்கள் யாவர்?

    Answer: கால்டுவெல் ஜி யு போப் வீரமாமுனிவர் 

46. திருநெல்வேலி ----- மன்னர்களோடு தொடர்பு உடையது?

     Answer: பாண்டியன் 

47. இளங்கோவடிகள் ----- மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்?

       Answer: பொதிகை 

48. திருநெல்வேலி ----- ஆற்றின் கரையில் அமைத்துள்ளது?

     Answer: தாமிரபரணி 




No comments:

Post a Comment