Wednesday, September 25, 2019

இந்திய அரசியல் அமைப்பு வினா-விடை - பகுதி 2

போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுள் "இந்திய அரசியலமைப்பு" பகுதியும் ஒன்றாகும். இதிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் கேட்க்கப்படும். தேர்வில் அனைத்து வினாக்களும் விடையளிப்பதன் மூலமே மிக சுலபமாக வெற்றிக் கனியைப் பறிக்க முடியும். எனவேதான் TNPSC, TRB, TET, போன்ற COMPETITIVE EXAM களில் பல்வேறுதுறை தொடர்பான கேள்விகள் கேட்க்கப்படுகின்றன. தேர்வு பாடப்பகுதி களை முதலில் முழுமையாக தெரிந்துகொள்வதன் மூலம், எந்த பாடங்களை எப்படி படித்து முடிக்கலாம் என்ற திட்டமிடுதல் கிடைக்கும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் கட்டாயம் உங்கள் தேர்வுக்கு உதவும்.

1. குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரத்து 123
2. குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை - 6 வாரங்கள்
3. மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
4. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 331
5. அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
6. பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்
7. ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்
8. இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
9. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
10. குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143
11. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
12. மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
13. இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
14. தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352
15. குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் - ஷரத்து 360
16. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்
17. குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்
18. இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
19. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன - பாராளுமன்றம்
20. இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது - இங்கிலாந்து
21. இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - 1.5 lakh a month to 5 lakh a month
22. இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் -  Rs 1.10 lakh a monthto 4 lakh a month
23. இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
24. துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை – மாநிலங்களவை.
25. குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? - 12 உறுப்பினர்களை நியமிக்க முடியும். 

No comments:

Post a Comment