Wednesday, September 25, 2019

இந்திய அரசியல் அமைப்பு - வினாவிடை

டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் "இந்திய அரசியலமைப்பு" பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அதனால் தேர்வில் வெற்றிப்பெற இந்தப் பகுதியும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கே 25 கேள்வி- பதில் கொடுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அவை உங்களுக்கு உதவும் என நம்புகின்றோம்.


1.அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் அமைந்திருப்பது - ஷரத்து 32

2.அரசியலமைப்பை திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 368

3.அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு பாராளுமன்றம்

4. நிறுத்திவைக்கப்பட இயலாத இரு ஷரத்துக்கள் - ஷரத்து 20 மற்றும் 21

5.அவசர கால நெருக்கடி நிலையின்போது தானாகவே நிறுத்திவைக்கப்படும் அடிப்படை உரிமை - ஷரத்து 19

6. வாக்களிப்பதற்கான வயது வரம்பு 18 என்று வாக்குரிமை அளிக்கும் ஷரத்து - ஷரத்து 326

7. ஷரத்து 20 மற்றும் 21 தவிர எந்த அடிப்படை உரிமையையும் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைக்க வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 368

8. அடிப்படை கடமைகள் என்பது அமைந்துள்ள ஷரத்து - ஷரத்து 51 A

9. 1948ல் நியமிக்கப்பட்ட மாநி்ல மறுசீரமைப்புக் குழு - ஜே.வி.பி. கமிட்டி

10. 1947ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழு எஸ்.கே.தார் கமிட்டி

11. மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.

12. சொத்துரிமை என்பது தற்போது அடிப்படை உரிமை அல்ல, ஆனால் சட்ட உரிமை

13. அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு - 1978

14. சொத்துரிமை 42வது திருத்தத்தின்போது நீக்கப்பட்டது.

15. தற்போது சொத்துரிமை உள்ள ஷரத்து - ஷரத்து 300 A

16. சொத்துரிமை நீக்கப்பட்டபோது இருந்த அரசு - ஜனதா அரசு

17. தனி அரசியலமைப்பை உடைய ஒரே ஒரு இந்திய மாநிலம் - ஜம்மு காஷ்மீர்

18. அரசியலமைப்பின்படி லோக்சபையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை - 552

19. அரசியலமைப்பின்படி இராஜ்யசபைக்கான உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை - 250 (238+12)

20. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கியது - 3 அதிகாரப் பட்டியல்கள்

21. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்தம் செய்ய இயலாது என்று குறிப்பிட்ட வழக்கு - கேசவானந்த பாரதி வழக்கு

22. அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது - அயர்லாந்து

23. அரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களி்ன் எண்ணிக்கை - 530

24. அரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 20

25. எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றியத்தைச் சார்ந்தவை என்னும் கருத்துப் படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - கனடா

No comments:

Post a Comment