ஐயா - அய்யா - எது சரி?

தமிழுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக எளிய "தொண்டு" ஐயா என்று எழுதுவதும், 'அய்யா" என்று அறவே பிழையானவாறு எழுதாமல் இருப்பதும்!

இந்தச் சீர்குலைப்பு என்றுதான் நிற்குமோ! மிக வருந்திக் கூறுகின்றேன்!

அருள்கூர்ந்து, அன்புடையீர், ஐயா என்று எழுதுங்கள்!!


ஏன் அய்யா என்பது சரியல்ல?

தமிழில் 'அய்' என்பதற்கு எந்தப்பொருளும் இல்லை. 'அய்' என்று தொடங்கும் சொற்கள் ஏதும் சங்க இலக்கியத்திலோ, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலோ பிற இலக்கியங்களிலோ இல்லை. 

ஆனால் ஐ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குப் பல பொருள்கள் உண்டு. ஐ என்றால் பெருமை, உயர்வு, அழகு, அன்பு என்னும் பொருள்கள் உண்டு. ஐ, ஐய, ஐயா, ஐயன் என வழிவழியாய் பொருள்பொதிந்த சொற்கள் இருந்துவந்துள்ளன.

இதுபோன்று இன்னும் ஏராளமான புதிய சொற்களை உருவாக்கி பயன்படுத்துகின்றனர். அவற்றில் மரபு சார்ந்த சொற்களை அப்படியே பயன்படுத்துவதுதான் தமிழுக்கு நல்லது. 

Post a Comment

0 Comments