தமிழ் இலக்கணம் | மணிப்பிரவாள நடை | மரபு

தமிழ் மரபு | தமிழ் இலக்கணம் | மணிப்பிரவாள நடை


மணிப்பிரவாள நடை என்பது தமிழ் நடையில் வடமொழியைச் சேர்த்து எழுதும் முறையாகும். சுமார் 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்த முறை தமிழறிஞர்களையும் விட்டு வைக்கவில்லை. தூய தமிழில் பேசுவதும் எழுதுவதும் இழிவாக நினைத்த காலம் அது. வடமொழியோடு தமிழை பயன்படுத்தினால்தன் உயர்வும் மதிப்பும் கிடைக்கும் என்று எண்ணிய புலவர்கள் தங்கள் படைப்புகளில் ஏராளமான வடமொழிச்சொற்களை தமிழுக்கு இறக்குமதி செய்தனர்.

ஓய்வு என்பதை தமிழில் சொல்லாமல் 'சிரமப்பரிகாரம்' என்றனர். அன்னதானம் என்பதை 'பந்தி போஜனம்' என்றே முழங்கினர். இப்படியாக திருமண அழைப்பிதழை 'விவாக பத்திரிக்கை' என அச்சடித்தனர். மகாகவி பாரதியாரும் இதற்கு விதிவிலக்கல்ல. வெற்றி முரசு என்று என்று சொல்ல வெட்கப்பட்டு 'ஜய பேரிகை'என்று எழுதினார்.ஆற்றங்கரைக்கு 'தீர்த்தக்கரை' என்றுரைத்தார்.

இந்த நிலை ஏறக்குறைய 1970 ஆம் ஆண்டு வரை நீடித்தது.தமிழக அறிஞர்களின் கடின முயற்சியால் பெரும்பான்மையான வடமொழிச்சொற்கள் தமிழை விட்டு சிறிது சிறிதாக வெளியேறின.ஆனாலும் முற்றாக வடமொழி வெளியேற வில்லை என்பது வருத்தமான‌ உண்மை.

மலாய் மொழி மற்றும் ஆங்கில மொழியிலிருந்து மொழி பெயர்த்த தமிழ் அறிஞர்கள் வடமொழியின் தாக்கம் காரணமாக சில வடமொழி கலந்த தமிழையே நமக்குத் தந்தனர். சான்றாக,

தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி என்பதில் தேசிய என்பது வடமொழி. இதை நாட்டுடைத் தமிழ்ப்பள்ளி என்று மொழி பெயர்த்திருக்கலாம்.

வடமொழித்தாக்கம் குறைந்து வரும் வேளையில், ஆங்கில மொழியின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. தமிழ் நாட்டைவிட குறைவாக இருப்பினும் பேச்சு மொழியில் ஆங்கில கலப்பு பெருகி வருகிறது. lunch சாப்பிட்டு விட்டு office க்குப் போனேன். road ட்டை cross பண்ணினதும் bus வந்து விட்டது. என்பன போன்ற தொடர்கள் வலிந்து பேசப்படுகின்றன.

அன்னிய மொழிகள் ஒரு மொழியில் கலப்பதைத் தவிர்க்க முடியாது என்றாலும் அவை ஆளுமை பெறுவதைக் குறைக்க வேண்டும்.

நிச்சயமாக அவைகள் ஆளுமை பெறுவதை நாம் பார்த்து நினைத்தால் குறைத்துவிடலாம். அதிகமான நேரங்களில் அதிக தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் பிறமொழி சொற்களின் ஆளுமையை குறைக்கலாம்..! 

Post a Comment

0 Comments