Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

பொது அறிவு - உயிரியல்-ஐந்துலக வகைப்பாட்டு முறை :
       R.H.விட்டேக்கர் (1920-1980) அமெரிக்கச் சூழ்நிலையியல் வல்லுநர் ஆவார். இவர் முதன்முதலில் அனைத்து உயிரினங்களையும் அவற்றிற்கிடையே காணப்படும் பரிணாமத் தொடர்பின் அடிப்படையில் ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தினார்.

important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-27



- 1969ஆம் ஆண்டு உயிரினங்களை ஐந்து உலகங்களாக வகைப்படுத்தினார்.

இவ்வகைப்பாடு அனைத்து அறிவியலாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

- மொனிரா உலகத்தில் 9000க்கும் அதிகமான சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.


- புரோட்டிஸ்டாவில் 59,950 உயிரினங்கள், பூஞ்சைகள் உலகத்தில் 1,00,000.

- தாவரங்கள் 2,89,640. மொத்தம் அறியப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை 11,70,000.

ஐந்துஉலகங்கள் :

1.மொனிரா     2.புரோட்டிஸ்டா     3.பூஞ்சைகள்     4.தாவரங்கள்      5.விலங்குகள்

மொனிரா :

- பாக்டீரியா ,சயனோபாக்டீரியா(நீலப்பசும்பாசி)

புரோட்டிஸ்டா :

- ஒரு செல் பாசி ,புரோட்டோசோவா

பூஞ்சைகள் :

- பூஞ்சை

தாவரங்கள்:

- பல செல் பாசி ,பிரையோபைட் ,டெரிடோபைட் ,ஜிம்னோஸ்பெர்ம் ,ஆஞ்சியோஸ்பெர்ம்

விலங்குகள் :

- துளையுடலிகள் ,குழியுடலிகள் ,தட்டைப்புழுக்கள் ,உருளைப் புழுக்கள் ,வளைதசைப் புழுக்கள் ,கணுக்காலிகள் ,மெல்லுடலிகள் ,முட்தோலிகள் ,முதுகுநாணுள்ளவை



ஐந்துலக வகைப்பாட்டின் முக்கிய அடிப்படைப் பண்புகள் :

- செல்லின் சிக்கலான அமைப்பு (புரோகேரியாட் முதல் யூகேரியாட்)

- உணவூட்டமுறை (தற்சார்பு ஊட்டமுறை மற்றும் பிற சார்பு ஊட்டமுறை)

- உடல்அமைப்பு (ஒருசெல் உயிரி அல்லது பல செல் உயிரி)

- குழுமப் பரிணாமம் அல்லது பரிணாமத் தொடர்பு

No comments:

Post a Comment