Saturday, June 8, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

பொது அறிவு - உயிரியல்- ஊட்டச் சத்துகளின் வகைகள்
important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-28



- கார்போஹைட்ரேட்டுகள்(Carbohydrates ) - ஆற்றல் அளிக்கின்றன.

- புரதங்கள்(Proteins)- வளர்ச்சி அளிக்கின்றன

- கொழுப்புகள்(Fats)- ஆற்றல் அளிக்கின்றன

- வைட்டமின்கள்(Vitamins) - உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன

- தாது உப்புகள்(Minerals)- உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன

- நீர்(Water) - உணவைக் கடத்துகிறது மற்றும் உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது.

         காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்களில் நீரின் அளவு வெவ்வேறு விகிதத்தில் உள்ளது.

 கீழே உணவின் பெயர் மற்றும் அதில் உள்ள நீரின் அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

தர்ப்பூசணி - 99 %                           வெள்ளரிக்காய் - 95 %

காளான் - 92 %                               பால் - 87 %

உருளைக்கிழங்கு - 75 %                முட்டை - 73 %

ஒரு ரொட்டித் துண்டு - 25 %

சில தகவல்கள் :

      காய்கறிகள், பழங்களை நறுக்கிய பின் கழுவினால், அவற்றிலுள்ள வைட்டமின் சத்து இழக்கப்படுகிறது. பெரும்பாலான காய்கறிகள், பழங்களின் தோலில்தான் அதிக அளவில் வைட்டமின்களும், தாது உப்புகளும் காணப்படுகின்றன.

- தானியங்கள், பயறு வகைகளைப் பலமுறை கழுவுவதால் அதிலுள்ள வைட்டமின்களையும் தாது உப்புகளையும் இழந்து விடுகிறோம்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் :

நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக் குறைவதால் ஏற்படும் நோய்,

குறைபாட்டு நோய் எனப்படும்.

ஊட்டச்சத்து : புரதம்

உணவுப் பொருள்கள்: மீன், இறைச்சி, முட்டை (வெள்ளைக் கரு), பால், பட்டாணி, தானியங்கள்

குறைபாட்டு நோய்(1) : குவாஸியோர்கர் (Kwashiorkar)(1 - 5 வயது குழந்தைகள்)

அறிகுறிகள் : வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு. கை மற்றும் கால்களில் வீக்கம்.

குறைபாட்டு நோய்(2) : மராஸ்மஸ் (Marasmus)

அறிகுறிகள் : குச்சி போன்ற கை, கால்கள், மெலிந்த தோற்றம், பெரிய தலை,

எடைக் குறைவு, உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைதல்.

ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்பதால் குறைபாட்டு நோய்களைத்

தவிர்க்கலாம்.



TNPSC GK Notes

No comments:

Post a Comment