Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

மூவேந்தர்கள்


important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-25சேரர் :

- சேரர் ஆட்சிப் பகுதியில் தற்போதைய கேரளமும், வடமேற்கு தமிழகமும் உள்ளடங்கி இருந்தன.

- சேரர் மரபில் வந்தவர்களுள்-இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சிலம்பு புகழ்சேரன் செங்குட்டுவன் முதலானோர் புகழ் ஓங்கியவர்கள். அவ்விருவருமே வடக்கில் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள் என்று கூறப்படுகிறது.

- சேரர்களின் தலைநகரம் வஞ்சி(கரூர்), துறைமுகம் தொண்டி மற்றும் முசிறி, சின்னமாக விற்கொடியும் விளங்கின.



சோழர் :

- சோழர்களின் ஆட்சிப் பகுதியில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் தென்னாற்காட்டின் சில பகுதிகள் உள்ளடங்கி இருந்தன.

- சோழ மரபில் வந்தவர்களுள்-கரிகாற் சோழன், கிள்ளிவளவன் ஆகியோர் புகழ்மிக்கவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சோழமன்னன் கரிகாலன். அவன் தனது ஆட்சிக் காலத்தில், ஈழத்தை வென்று, அந்நாட்டவரைக் கைதிகளாகக் கொண்டு வந்து காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டினார். அது இன்றும் பயன்பாடில் உள்ளது. எனவே அவர் "கரிகால் பெருவளத்தான்" என்று போற்றப்படுகிறார்.

- சோழர்களின் தலைநகரம் உரையூர், துறைமுகம் காவிரிப் பூம்பட்டினம், சின்னமாக புலிக்கொடியும் விளங்கின.

பாண்டியர்:

important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-25



- பாண்டியர் ஆட்சிப் பகுதி கன்னியாகுமரி முதல் மதுரை வரை பரவியுள்ளது.

- பாண்டிய மரபில் வந்த மன்னர்களுள் பீடும் பெருமையும் வாய்த்தவர்கள் சிலர். அவர்களுள் பாண்டியன் முடத்திமாறனும், தன்மீது போர் தொடுத்த ஏழு குறுநில மன்னர்களை ஒருசேர வென்ற தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும், சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற பெருமைக் குரியவனும், யானோ அரசன்? யானே கள்வன்! என்று கூறி வளைந்த தன் செங்கோலை நிமிர்த்துமாறு உயிர் நீத்துவனுமான பாண்டியன் நெடுஞ்செழியனும் குறிப்பிடத்தக்கவர்கள்.

- பாண்டியர்களின் தலைநகரம் மதுரை, துறைமுகம் கொற்கை, சின்னமாக மீன் கொடியும் விளங்கின.

குறுநில மன்னர்கள்.

- குறுநில மன்னர்களாக விளங்கிய கடையெழுவள்ளல்களான பாரி, ஓரி, ஆயி, எழினி, நள்ளி, மலையன், பேகன் ஆகியோர் புகழ்பெற்றவர்கள்.



TNPSC GK Notes

No comments:

Post a Comment