Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | தமிழ் பாடக்குறிப்புக்கள்

பொதுதமிழ் -25
சந்திப்பிழையை நீக்குதல்
tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a- ஒளவையேச் சுட்டப்பழம் வேண்டுமா? சுடாதப் பழம் வேண்டுமா என்று கேட்டான் முருகப் பெருமான்.

சரி - ஒளவையே சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?என்று கேட்டான் முருகப் பெருமான்.

- ஊறுக்காய் வைத்தால் பழைய சோறு உள்ளேப் போகாதா?

சரி - ஊறுகாய் வைத்தால் பழைய சோறு உள்ளே போகாதா?

- படிக்காதப் பெண்ணினால் தீமை! என்னப் பயன் விளைப்பால் அந்த ஆமை

சரி - படிக்காத  பெண்ணினால் தீமை! என்ன பயன் விளைப்பால் அந்த ஆமை

- இரவுப் பகல் பாராது படித்தும் தேர்ச்சி பெற வில்லையே ! 

சரி - இரவு பகல் பாராது படித்து தேர்ச்சி பெற வில்லையே!

- சென்னைச் சென்றுத் திரும்ப எவ்வளவுச் செலவாகும்?

சரி - சென்னை சென்று திரும்ப எவ்வளவு செலவாகும்?

-கண்ணாக் கண்ணா இங்கே வந்துப் பார்

சரி- கண்ணா கண்ணா இங்கே வந்து பார்

- பலப்பல வென்று பொழுது விடிந்தது 

    சரி - பலபல என்று பொழுது விடிந்தது

- படிக்கும்படி சொன்னால் கண்டுக் கொள்ளாமல் இருப்பதா?

சரி - படிக்கும் படி சொன்னால் கண்டு கொள்ளாமல் இருப்பதா? 

- என்னோடுப் போந்த இளங்கொடி நங்கை 

சரி - என்னோடு போந்த இளங்கொடி நங்கை

- விடிக்காலை வேளை சுடுச்சோறு ஆக்கி பரிமாறக் கூடுமா?

சரி - விடிகாலை வேளை சுடு சோறு ஆக்கிப் பரிமாறக் கூடுமா?

- வெண்ணிலாக் கலக்கலவென்று சிரித்தாள் 

சரி - வெண்ணிலா கலகலவென்று சிரித்தாள்

- குபுக்குபுவென்றுப் புகை மண்டிலம் சூழ்ந்தது

சரி - குபுகுபு வென்று புகை மண்டிலம் சூழ்ந்தது

- துறவிக் குடிலுக்குள் வந்தச் சிறுவர் இரண்டுபேர்

சரி - துறவி குடிலுக்குள் வந்த சிறுவர் இரண்டுபேர்

- வாழ்கத் தமிழ் என்று அவனாச் சொன்னான் அறிந்துச் சொல் எனக்கு 

சரி - வாழ்க தமிழ் என்று அவனா சொன்னான் அறிந்து சொல் எனக்கு

- நீரோச் சோறோ எதுக் கிடைத்தாலும் உண்டுச் செல்வேன் 

சரி - நீரோ, சோறோ எது கிடைத்தாலும் உண்டு செல்வேன்

- கல்விச் செல்வத்தை போற்றாதவர் இலர் 

சரி - கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் இலர்

- அந்த பெண் நன்கு எழுதினாள்

சரி - அந்தப் பெண் நன்கு எழுதினாள்

- தட்டு தடுமாறி சென்ற முதியவருக்கு உதவினான்

சரி - தட்டுத் தடுமாறிச் சென்ற முதியவருக்கு உதவினான்

- தமிழர் உயர்ந்தப் பண்புகளை பெற்ற சான்றோர் ஆவர். 

சரி - தமிழர் உயர்ந்த பண்புகளைப் பெற்ற சான்றோர் ஆவர்.

- கிட்ட போனால் முட்ட பகை

சரி - கிட்டப் போனால் முட்டப் பகை

- கொத்தி திரியும் அந்த கோழி

சரி - கொத்தித் திரியும் அந்தக் கோழி

- நான் ஓர் வீட்டைக் கட்டினேன்

சரி - நான் ஒரு வீட்டைக் கட்டினேன்

வல்லான் நல்லானை பார்த்து கேட்டான் 

சரி- வல்லான் நல்லானைப் பார்த்துக்கேட்டான்

பட்ட பகலிலே பாவலர்க்கு தோன்றுகிற நெட்டை கனவு

சரி - பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுகிற நெட்டைக் கனவு

அந்த சிறுவன் எந்த பள்ளியில் படித்து சிறந்தான்

சரி - அந்தச் சிறுவன் எந்தப் பள்ளியில் படித்துச் சிறந்தான்

இந்த வீடு எப்படிக் கட்டினாய்

சரி - இந்த வீட்டை எப்படிக் கட்டினாய்?

இசையினை பண் என்றும் கூறுவர்

சரி - இசையினைப் பண் என்றும் கூறுவர்

எந்த கதையை படித்தாலும் அதிக முக்கிய பகுதிகளைக் குறிக்க 

சரி - எந்தக் கதையைப் படித்தாலும் அதில் முக்கிய பகுதிகளைக் குறிக்க

சாரை பாம்பு குருவி கூட்டில் நுழைந்தது

சரி - சாரைப் பாம்பு குருவிக் கூட்டில் நுழைந்தது

ஆசிரியர் நடத்தா பாடத்திலிருந்து எந்தக் கேள்வியும் வரவில்லை 

சரி - ஆசிரியர் நடத்தாப் பாடத்திலிருந்து எந்தக் கேள்வியும் வரவில்லை



TNPSC TAMIL NOTES

1 comment: