Saturday, June 8, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

பொது அறிவு - இயற்கை வளம்
- உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை எது - மெரினா கடற்கரை

- மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் ஒன்று சேருமிடம் எது - நீலகிரி மலை

- வருசநாடு மலைக் கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் கணவாய் எது - செங்கோட்டை கணவாய்

- தமிழ் நாட்டின் முதல் அணுமின் நிலையம் உள்ள இடம் எது -கல்பாக்கம்
- இந்தியாவிலுள்ள மிக உயர்ந்த பீடபூமி எது - லடாக் பீடபூமி
- தீபகற்ப பீடபூமியை இரு சமமற்ற பகுதியாகப் பிரிக்கும் ஆறு எது -நர்மதை

- ஜவ்வாது மலை அமைந்துள்ள மாவட்டம் எது - வேலூர்

- லாவா எனப்படும் எரிமலைக் குழம்பால் உருவாகி கருப்பு மண்ணால்

ஆன பகுதி எது - மாளவ பீடபூமி

- ஆந்திர கடற் கரைச்சமவெளியில் அமைந்துள்ள ஏரி எது -கொல்லேரு ஏரி

- உலகிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் எது -ஆரவல்லி மலைத் தொடர்

- தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் எது - ஆனைமுடி

- கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகளுக்கு இடையே உள்ள கடற்கரை எது - சோழ மண்டல கடற்கரை

- மகாநதி ஆற் றின் தெற்கே அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது - சிலிகா ஏரி

- மகாநதி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையே காணப்படும் கடற்கரை எது - வடசர்க்கார் கடற்கரை

- வேம்பநாடு ஏரி எந் த மாநிலத்தில் உள்ளது - கேரளா

questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-36

No comments:

Post a Comment