Saturday, June 8, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

பொது அறிவு
வேதியியல்  - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-29

மாற்றங்கள் :

மாற்றங்கள் எனப்படுவது பொருள்களின் வண்ணம், வெப்பநிலை, இடம், வடிவம், பருமன் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள் ஆகும்.

மாற்றங்களின் வகைகள்:

1.  மெதுவான, வேகமான மாற்றங்கள்

2.  மீள் மாற்றம், மீளா மாற்றம்

3.  விரும்பத்தக்க மாற்றங்கள், விரும்பத்தகாத மாற்றங்கள்

4.  கால ஒழுங்கு மாற்றங்கள், கால ஒழுங்கற்ற மாற்றங்கள்

5.  வெப்பம் உமிழ் மாற்றங்கள், வெப்பம் கொள் மாற்றங்கள்



1. மெதுவான, வேகமான மாற்றங்கள் :

மெதுவான மாற்றம்:

சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகழும் மாற்றமே மெதுவான மாற்றம் ஆகும்.

எ.கா :

குழந்தை வளர்தல், இரும்பு துருப்பிடித்தல், விதை வளர்ந்து மரமாதல், உணவு சமைத்தல், பால் தயிராதல்

வேகமான மாற்றம்:

சில நொடிகளில் அல்லது சில நிமிடங்களில் நிகழும் மாற்றமே வேகமான மாற்றம் ஆகும்.

important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-29



எ.கா :

காகிதம் எரிதல், பட்டாசு வெடித்தல், மின் சக்தியால் விளக்கு ஒளிர்தல் போன்ற

நிகழ்வுகள் விரைவாக நிகழ்கின்றன. எனவே இந்நிகழ்வுகளெல்லாம் வேகமான

மாற்றத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

2. மீள் மாற்றம் மற்றும் மீளா மாற்றம் :

மீள் மாற்றம் :

சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும். இவ்வகை மாற்றங்களே மீள் மாற்றங்கள் எனப்படும்.

எ.கா :

1. பனிக்கட்டி உருகுதல்,

2. தங்கம், வெள்ளி, இரும்பு போன்ற உலோகங்களாலான அணிகலன்கள் மற்றும் கருவிகள் செய்வதைப் பார்த்திருப்போம். முதலில் உலோகங்களை வெப்பப்படுத்தி,

உருக்கிய பின், தேவையான வடிவத்திற்கு அவற்றை மாற்றுகின்றனர். அவை குளிர்ந்தபின் மீண்டும் கடினமாகின்றன. இதுவும் ஒரு மீள் மாற்றமே.

மீளா மாற்றம் :

சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப இயலாது. இவ்வகை மாற்றங்கள் மீளா மாற்றங்கள் எனப்படும்.

எ.கா :

சோறு சமைத்தல், சோறு சமைத்தலில் சோறு மீண்டும் அரிசி ஆகுமா? ஆகாது. எனவே இது மீளா மாற்றம் ஆகும்.

3. விரும்பத்தக்க மாற்றங்கள் மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள் :

விரும்பத்தக்க மாற்றங்கள் :

மழைபொழிதல், பூ மலர்தல், காய்கனியாதல் போன்ற மாற்றங்கள் நிகழும் பொழுது அவை நமக்கு பயனுள்ளதாக அமைகின்றன. இவ்வாறு நல்ல பயன்களைத் தரும் மாற்றங்கள் விரும்பத்தக்க மாற்றங்கள் ஆகும்.

விரும்பத்தகாத மாற்றங்கள் :

உணவு கெட்டுப்போதல், எரிமலை வெடித்தல், இரும்பு துருப்பிடித்தல், கண்ணாடி உடைதல் போன்ற மாற்றங்களை நாம் விரும்புவதில்லை.

ஏனென்றால், அவை நமக்குப் பயனற்றதாகவும், ஆபத்தானதாகவும் அமைகின்றன. இவ்வாறு நல்ல பயன்களைத் தராத மாற்றங்கள் விரும்பத்தகாத மாற்றங்கள் ஆகும்.

4. கால ஒழுங்கு மாற்றங்கள் மற்றும் கால ஒழுங்கற்ற மாற்றங்கள் :

கால ஒழுங்கு மாற்றங்கள் :

குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் மாற்றங்கள் கால ஒழுங்கு மாற்றங்கள் எனப்படும். இவற்றை ஊகித்து அறிய இயலும் (பருவ நிலை).

எ.கா : கடிகார ஊசல், நிலவின் பல்வேறு நிலைகள் மற்றும் இரவு பகல் வருதல்

கால ஒழுங்கற்ற மாற்றங்கள் :

குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும்மீண்டும் நடைபெறாத மாற்றங்கள் கால ஒழுங்கற்ற மாற்றங்கள் எனப்படும். இவற்றை ஊகித்து அறிய இயலாது (நிலநடுக்கம்).

எ.கா : எரிமலை வெடித்தல், நில நடுக்கம், மண் சரிவு, விபத்து

5. வெப்பம் உமிழ் மாற்றங்கள் மற்றும் வெப்பம் கொள் மாற்றங்கள் :

வெப்பம் உமிழ் மாற்றங்கள் :

சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உமிழப்படுகிறது. இவ்வகை மாற்றங்கள் வெப்பம் உமிழ் மாற்றங்கள் ஆகும்.

எ.கா : தீக்குச்சி எரிதல், தூய்மையாக்கி (Detergent) அல்லது சலவைச் சோடா நீரில்

கரைதல்.

வெப்பம் கொள் மாற்றங்கள் :

சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உறிஞ்சப்படுகிறது. இவ்வகை மாற்றங்கள் வெப்பம் கொள் மாற்றங்கள் ஆகும்.

எ.கா : குளூக்கோஸ், அமோனியம் குளோரைடு நீரில் கரைதல்

வெல்க்ரோ உருவான விதம் :

important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-29



நமது சுற்றுப்புறத்தை உற்றுநோக்கினாலே போதும். பல புதிய கண்டுபிடிப்புகளை நம்மால் உருவாக்க முடியும். இதற்கு 1948-ஆம் ஆண்டு ஜார்ஜ் மெஸ்ட்ரல் என்பவர் உருவாக்கிய

வெல்க்ரோ(Velcro) ஒரு சரியான உதாரணம்.

ஜார்ஜ் மெஸ்ட்ரல்தன் நாய்க் குட்டியுடன் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். ஒரு நாள் நடைப்பயிற்சி முடித்து திரும்பி வந்த அவர் தன்னுடைய ஆடையிலும், நாய்க்குட்டியின் உடலிலும் சிறிய விதைகள் ஒட்டியிருப்பதைக் கண்டார்.

அந்த விதைகளை நுண்ணோக்கியில் பார்த்த போது பல சிறிய கொக்கி போன்ற அமைப்புகள் இருந்ததைப் பார்த்தார். உடனே அதைப்போல் ஒரு பொருளைச் செய்ய முற்பட்டார்.

வெல்க்ரோ (Velcro)என்று கூறப்படும் ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தார்.



வெல்க்ரோவில் சிறிய கொக்கிகள் உள்ளன. அவை பற்றும் தன்மையுடையவையாக இருந்தன. இன்று பைகள், காலணிகள், உடைகள், எனப் பலவற்றில் வெல்க்ரோ பயன்படுத்தப்படுகிறது.



TNPSC GK Notes

No comments:

Post a Comment