Sunday, November 25, 2018

கணிதம் TNPSC GK Q & A

41. 1, 27, 125, 343, 729, 1331, ? கேள்விக்குறி உள்ள இடத்தில் வரும் எண்?
  3025
  2197
  2971
  2179

42. 2, 9, 28, 65 .............. என்ற தொடரின் 9 - வது உறுப்பு?
  710
  690
  730
  540

43. 500 -க்கும், 1000 -க்கும் இடையில் உள்ள 105 - ஆல் வகுபடும் அனைத்து எண்களின் கூடுதல்?
  4675
  3675
  5175
  3575

44. இரு எண்களின் விகிதம் 3 : 4 அவ்விரு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 625 எனில் அந்த எண்களைக் கண்டுபிடி?
  18, 24
  15, 20
  6, 8
  20, 25

45. ஒரு முழு எண்ணின் வர்க்கம் 169, அந்த முழு எண் 12 அல்ல எனில் அது என்னவாக இருக்கும்?
  13
  12
  11
  14

46. 3 1/2 : 0.4 = x 1 1/7 என்றால் x - ன் மதிப்பு?
  7 / 2
  21
  14
  10

47. அடுத்தடுத்த இரு இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 265. அவை?
  10, 11
  12, 13
  8, 9
  11, 12

48. 1 + .01 + .0001 + .000001 + ...... என்ற கூட்டுப் பலன் முடிவிலி வரை?
  1.010109
  100 / 99
  99 / 88
  1.01010109

49. 1 முதல் 40 வரையிலுள்ள எண்களில் 4 - ஆல் வகுபடும் எண்களையும், 4 - ஐ ஏதாவது ஒரு இடத்தில கொண்ட எண்களையும் நீக்கினால் கிடைக்கும் எண்களின் எண்ணிக்கை?
  66
  26
  30
  மேற்கண்ட எண்கள் ஏதுமில்லை

50. இரு எண்கள் 3 : 5 விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணையும் 10 ஆல் அதிகரிக்க அது 5 : 7 விகிதமாகிறது. அவ்வெண்கள்?
  7, 9
  3, 5
  15, 25
  மேற்கண்ட எண்கள் ஏதுமில்லை

51. ஒரு நபர் ஒரு எண்ணை 27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 72 ஆல் பெருக்க அவருக்கு கிடைத்த விடை சரியான விடையைவிட 23175 மடங்கு அதிகம். எனில் சரியான விடை?
  515
  4615
  4635
  550

52. ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் = 5 :3 அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ.50 வீதம் எனில் மொத்தம் ரூ.?
  ரூ.20, 000
  ரூ.30, 000
  ரூ.40, 000
  ரூ. 33, 000

53. ஒரு உருளையின் விட்டம் 14 செ.மீ. உயரம் 20 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு?
  1188 ச.செ.மீ.
  596 ச.செ.மீ.
  2376 ச.செ.மீ.
  880 ச.செ.மீ.

54. ஒரு கூம்பு, ஒரு அரைக்கோளம், ஒரு உருளை மூன்றும் சமமான அடிப்பாகத்தையும், உயரத்தையும் கொண்டுள்ளன. அவற்றின் கொள்ளளவுகளின் விகிதாச்சாரம்?
  1 : 2 : 3
  1 : 3 : 2
  4 : 3 : 1
  2 : 3 : 4

55. 18 ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய ஒரு சதுரத்தின் சுற்றளவைக் காண்க?
  140
  144
  136
  156

56. ஒரு வட்டத்தின் ஆரத்தை 100 % அதிகரித்தால் அதன் பரப்பளவில் அதிகரிக்கும் சதவீதம்?
  50
  100
  150
  300

57. ஒரு கூம்பின் சாயுரம் 85 செ.மீ. செங்குத்து உயரம் 13 செ.மீ. எனில், அதன் மொத்தப் பரப்பளவு?
  44661 செ.மீ
  44616 செ.மீ
  46461 செ.மீ
  66441 செ.மீ

58. ஒரு வட்டதினுடைய சுற்றளவு 22 செ.மீ. எனில், அந்த வட்டத்தினுடைய பரப்பளவு?
  38.5 செ.மீ.
  40.5 செ.மீ.
  60.5 செ.மீ.
  50.5 செ.மீ.

59. ஒரு கோளத்தின் ஆரம் 10 செ.மீ. ஆனால், அதன் மேல் தள பரப்பு, கோளத்தின் காண அளவில் எத்தனை விழுக்காடு?
  30 %
  24 %
  26.5 %
  45 %

60. ஒரு சக்கரத்தின் ஆரம் 12 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?
  880 மீட்டர்
  440 மீட்டர்
  1080 மீட்டர்
  280 மீட்டர்


No comments:

Post a Comment