பல்வேறு பதவிகளுக்கான நேர்காணல் தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

tnpsc interview
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய துறைகளுக்கான புள்ளிவிவராளர் பதவிக்கு தேர்வெழுதி தகுதி பெற்ற 62 பேருக்கு ஜூலை 10 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு இந்திய சமய அறநிலைய ஆட்சித் துறையில் செயல் அலுவலர் நிலை-1 பணிக்கான தேர்வில் தகுதி பெற்ற 9 பேருக்கு ஜூலை 4 ஆம் தேதியும், இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கானத் தேர்வில் தகுதி பெற்ற 31 பேருக்கும், இளநிலை இரசாயனர், இரசாயனர் மற்றும் தொல்லியல் இரசாயனர் ஆகிய பணியிடங்களுக்கானத் தேர்வில் தகுதி பெற்ற 30 பேருக்கும் ஜூலை 10 ஆம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments