உங்கள் Username / Password மறந்துவிட்டதா?

TNPSC இணைய தளத்தில், ஏற்கனவே ஒரு முறைப் பதிவு (One time registration) செய்து இருப்பவர்கள், தங்களின் பயனாளர் ஐ.டி (User ID) மற்றும் கடவுச் சொல் (Password) இதில் ஏதாவது ஒன்றை மறந்து விட்டால், அதனை TNPSC கொடுத்து இருக்கும் வாய்ப்பில் (Option) சென்று நமது விபரங்களைக் கொடுத்து மீட்டுக் கொள்ளலாம். பார்க்க படம்.

tnpsc login password forgot

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால், மறந்து போன நமது User id/ Password போன்றவற்றை மீண்டும் பெற நாம் நமது 10ம் வகுப்பு பதிவு எண்ணை (பள்ளி இறுதி வகுப்பு எண்) சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் 10ம் வகுப்பு பதிவு எண்ணானது, பூஜ்யத்தில் ஆரம்பித்து, அதனையும் சேர்த்து நீங்கள் உள்ளீடு செய்தால் தவறான பயனாளர் என்று தகவல் வரும். உங்களால் உங்களது மறந்து போன User id/Password பெற முடியாது.

அதற்கு மாறாக முதலில் உள்ள பூஜ்யத்தை நீக்கிவிட்டு உள்ளீடு செய்தால் நீங்கள் உங்கள் மறந்து போன தகவலை தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, உங்கள் 10ம் வகுப்பு பதிவு எண் 041528 என்று வைத்துக் கொண்டால், நீங்கள் உள்ளீடு செய்யும் போது 41528 என்று மட்டுமே செய்ய வேண்டும். மாறாக முதலில் உள்ள பூஜ்யத்தை சேர்த்தால், பதில் வராது. Invalid User Details என்று வரும்.
உங்கள் நிரந்தரப் பதிவு User Id / Password மறந்து மறந்து விட்டன என்பதற்க்காக புதிதாக ஒரு முறை நிரந்தரப் பதிவு கணக்கினை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

Post a Comment

1 Comments