இன்று (ஏப்ரல் 29ந்தேதி) ஆசிரியர் தகுதிக்கான 'டெட்' தேர்வு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, இன்று (ஏப்:29) நடக்கிறது. 'காப்பியடித்தல், ஆள்மாறாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டால், மூன்று தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 'டெட்' தேர்வுக்கு,7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வை, 598 மையங்களில், 2.37 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாளை, 10ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, இரண்டாம் தாள் தேர்வு, 1,561 மையங்களில் நடக்கிறது. இதில், 5.03 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, 3,000 ஆசிரியர்கள் இடம் பெற்ற, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது; 18 ஆயிரம் ஆசிரியர்கள், கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். காலை, 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, 8:30 மணிக்கே தேர்வர்கள், தேர்வு அறைக்கு வந்து விட வேண்டும். காலை, 9:00 மணிக்கு மேல் வருவோருக்கு அனுமதி கிடையாது.

காப்பியடித்தல், மற்றவர்களிடம் கேட்டு எழுதுதல், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேட்டில் ஈடுபடக் கூடாது. மீறுவோருக்கு, மூன்று, 'டெட்' தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ள

Post a Comment

0 Comments