பொது அறிவு | அக்னி ஏவுகணை

அண்மையில் டிசம்பர் 2016 மற்றும் ஜனவரி 2017-இல் அக்னி 5 ஏவுகணை மற்றும் அக்னி 4 ஏவுகணைகள் சோதனை நடத்தி வெற்றி பெறப்பட்டுள்ளது. அவைகள் பற்றிய விவரம் வருமாறு.

பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் பெயருடைய நடுத்தர தூரம் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வகைகளைக் குறிக்கும்.

அக்னி ஏவுகணை நீண்ட இயங்கு தூரம் கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று நிலத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றோரு இடத்தைத் தாக்கும் ஏவுகணை யாகும்.

அக்னி ஏவுகணையின் முக்கியத் துவம் கருதி அத்திட்டத்தில் இருந்து அக்னி ஏவுகணைத் திட்டம் பிரிக்கப்பட்டு ராணுவ பட்ஜெட்டிலிலிருந்து நிதி ஒதுக்கி தனி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.அக்னி-1

திட எரிபொருள் கொண்ட முதல் அடுக்குடன் கூடிய ஈரடுக்கு அக்னி தொழில்நுட்பம், சந்திபூரிலுள்ள இடைக்கால சோதனை தளத்திலிருந்து 1989-ஆம் ஆண்டு மே மாதம் சோதிக்கப் பட்டது.

அது 1000 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருள் அல்லது அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய திறனுடையதாக இருந்தது. இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு அக்னி-1 ஆகிய திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.

இதன் திட்ட இயக்குனராக இருந்த  அப்துல்கலாம் அவர்களுக்கு  பல வெளிநாடுகளின் நெருக்கடி இருந்த போதும் வெற்றிகரமாக சோதனை செய்து சாதனை படைத்தார்.

பன்னிரண்டு டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட அக்னி-1 ஏவுகணை 700 முதல் 1250 கிலோமீட்டர் தூரத்திற்கு 1000 கிலோ கிராம் எடையுடைய அணு ஆயுதத்தை சுமந்துகொண்டு நொடிக்கு 2.5 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இந்த ஏவுகணை ஒடிசா அருகிலுள்ள வீலர் தீவிலிலிருந்து, 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

அக்னி-2

அக்னி-2 ஏவுகணை, 300 கிலோமீட்டர் இயங்கு தூரமும் 20 மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் விட்டமும் 18 டன் எடையும் கொண்டது.

அக்னி-2 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட எரிபொருள் கொண்டு இயங்குவன.

அக்னி-2 ஏவுகணை, 1999-ஆம் ஆண்டு சோதிக்கப்பட்டது. பின்னர் 2010-ஆம் ஆண்டு புதிய தொழில்நுட்பத்துடன் சோதனை செய்து வெற்றியடைந்தது.
அக்னி-3

அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் மூன்றாவது ஏவுகணையான அக்னி-3, 5000 கிலோமீட்டர் இயங்கு தூரமும், 1.5 டன் எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் கொண்டது. அக்னி-3 ஏவுகணை தனது இரண்டு அடுக்குகளிலும் திட எரிபொருள் கொண்டு இயங்கு வதாகும். ஒடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து 2006 -ஆம் ஆண்டு அக்னி-3 சோதிக்கப்பட்டது.

ஏவுகணையின் இரண்டாம் அடுக்கு பிரியத்தவறியதால் ஏவுகணை இலக்கை எட்டாமலே விழுந்தது சோதனைக்குப்பிறகு தெரியவந்தது. மீண்டும் வீலர் தீவிலிருந்து 2007-ஆம் ஆண்டு வெற்றிகர மாக சோதிக்கப்பட்டது.

2008-ஆம் ஆண்டு மற்றொரு முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த மூன்றாவது சோதனையின் போது அக்னி-3 ஏவுகணையின் விரைவாக உபயோகிக்கக் கூடிய தன்மை உறுதிபடுத்தப்பட்டது. இந்தியா இதன் மூலம் தனது எதிரிகளின் முக்கிய இடங்களைத் தாக்கும் வல்லமையைப் பெற்றது.

அக்னி-3 ஏவுகணை தனது இலக்கை, 40 மீட்டர் துல்லிலியத்துடன் தாக்கக்கூடியது என்று கூறப்படுகிறது. இதனால் அக்னி-3 ஏவுகணையே உலகின் மிகத் துல்லிலியமான தாக்குகணை என்றாகிறது. மிக அதிக துல்லிலியத்தினால் இதன் இலக்கைத் தகர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

இதன் மூலம் குறைந்த எடையுடைய ஆயுதங்களைக் கொண்டே நிர்ணயிக்கப் பட்ட இலக்கில் அதிக அழிவை வெற்றிகர மாக உண்டாக்க முடியும். ஆகையால் இந்தியாவால் குறைந்த அளவு அணுப் பிளவு அல்லது அணு இணைவு பொருட்களைக் கொண்டு மிக அதிக ஆற்றலுடைய அணு வெடிப்பை நிகழ்த்த முடியும்.

அக்னி-4

முன்னர் "அக்னி-2 பிரைம்' என்றழைக்கப்பட்ட அக்னி-4, அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் நான்காவது ஏவுகணையாகும். முதன்முதலாக, 2011-ஆம் ஆண்டு இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் அருகிலுள்ள வீலர் தீவிலிருந்து  சோதனை செய்யப்பட்டது.

மீண்டும் 2012 அன்று அதன் முழு இயங்கு தூரமான 4000 கிலோமீட்டர் தூரத்திற்கு அதே தீவிலிலிருந்து ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அக்னி-4 ஏவுகணை, 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும், 2 டன் எடையுடைய ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் கொண்டது.

இந்த ஏவுகணை, 3000 முதல் 4000 கிலோ மீட்டர் இயங்கு தூரமும், 3000ளிஈ வெப்பத்தையும் தாங்கக்கூடியது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மிக உயரிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப் பட்ட இந்த ஏவுகணை, நடமாடும் ஏவுதளத்திலிலிருந்தும் ஏவக்கூடியதாகும்.

அக்னி-5

அக்னி-5 ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும். இதனைக் கொண்டு 8000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்க இயலும்.

அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஈரடுக்கு அக்னி-3 ஏவுகனையோடு கூடுதலாக ஒரு அடுக்கைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத் தில் இருந்து ஏவப்படக்கூடியதால், இதை இடமாற்றுவது மிகவும் எளிதானது.

அக்னி-5 ஏவுகணை, 17 மீட்டர் உயரமும், 50 டன் எடையும் கொண்டது. ஓடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து, 2012 -ஆம் ஆண்டு ஏவுகணை முதலில் சோதிக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டு, 2013-இல் சோதிக்கப்பட்டது. மீண்டும் வீலர் தீவிலிலிருந்து இரண்டாம் முறையாக, 15 செப்டம்பர் 2013 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

அக்னி ஏவுகணையின் 6-வது சோதனை ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் 2017 ஜனவரி 2-ஆம் தேதியன்று அன்று இந்த ஏவுகணை 4000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

Post a Comment

0 Comments