தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப்-2A - நடப்பு நிகழ்வு - பிப்ரவரி -2017


பிப்ரவரி 02, 2017 அன்று இந்தியாவுடன் இரயில்வே துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு
இத்தாலி

ஆப்பிள்' (Apple Inc) மொபைல் ஃபோன் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பு தொழிற்சாலையை துவங்க உள்ள நகரம்
கர்நாடகா

Contemporary West Asia: Perspectives on Change and Continuity - என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சுஜாதா ஐஸ்வர்யா (Sujata Ashwarya) மற்றும் முஜிப் ஆலம் (Mujib Alam)

பிப்ரவரி 03, 2017 அன்று இந்திய கடற்படையினால் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீருக்கடியிலான துறைமுகப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைமை (Integrated Underwater Harbour Defence and Surveillance System) துவங்கப்பட்டுள்ள நகரம்
மும்பை

பள்ளி பொதுத்தேர்வு விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினம் என்னும் பிரிவை பீகார் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

பிப்ரவரி 06 - பெண் பிறப்புறுப்பு அழித்தலுக்கெதிரான சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation)

மத்திய நிதியமைச்சரின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் - சஞ்சீவ் சன்யால் (Sanjeev Sanyal)

2017 - 2018 பட்ஜெட்டில் ரிசர்வ் வங்கியின் கீழ் பணப்பரிமாற்ற ஒழுங்குமுறை வாரியம் (Payments Regulatory Board) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இவ்வமைப்பின் தலைவராக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் செயல்படுவார்

தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரான சரத் கமல் 7 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சம்மேளன (ASF) 37 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் போது அதன் துணைத்தலைவராக தேவேந்திரநாத் சாரங்கி தேர்வு செய்யப்பட்டார்

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜீனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது

ரூ 3 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு, அதே மதிப்பில் (100%) அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த விதியானது ஏப்ரல் 01 முதல் செயல்படும் என அறிவித்துள்ளது

நான்காவது ஃபிம்ஸ்டெக் கூடுகை - 2017 (4th BIMSTEC Summit - 2017) நேபாளத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

'ஏற்றுமதிக்கான வணிக உட்கட்டமைப்பு திட்டம்' (Trade Infrastructure for Export Scheme - TIES) என்னும் திட்டம் 2017 - 2018 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாகன ஓட்டுநராகவும், அவரது இந்திய தேசிய இராணுவத்தில் கர்னலாக இருந்துவருமான நிஜாமுதீன் (116 வயது), உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 06, 2017 அன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் காலமானார்

Post a Comment

0 Comments