Sunday, February 5, 2017

பொது அறிவு | 104வது இந்திய அறிவியல் மாநாடு #pothu arivu

அறிவியல் ஆராய்ச்சிகள் பல புதுமைகளை தோற்றுவிக்கவல்லவை. புதுப்புது ஆய்வு முடிவுகளை வெளிக் கொணர்வதன் மூலம் அறிவுப்பெருக்கத்திற்கு வழிவகுக்கக்கூடியவை. மனித அறிவினை புதுப்பித்துக் கொண்டே இருப்பவை.  அறிவியல் ஆராய்ச்சி களின் வெற்றி, நாட்டினை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்பவை. அறிவியல் ஆராய்ச்சிகளின் விளைவாக ஏற்படும் அறிவு முன்னேற்றம் ஒரு  நாட்டிற்கு பொருளாதாரத்தினையும், உலக அரங்கில் மதிப்பினையும் ஒருசேர கொண்டு வந்து சேர்க்கும் திறன்படைத்தவை.

இந்தியா, அறிவியல் ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டும், ஊக்கப் படுத்தியும் வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் மாநாட்டினை இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் (The Indian Science Congress Association) நடத்தி வருகிறது.

இச்சங்கத்தின் 104-வது மாநாடு திருப்பதி வெங்கடடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் 2017 ஜனவரி 4 முதல் ஜனவரி 6 வரை நடைபெற்றது. இதில் வேதியியல் அறிவியல், மானுட அறிவியல், விலங்கியல் அறிவியல், மருத்துவ அறிவியல், சுற்றுச் சூழல் அறிவியல், இயற்பியல் அறிவியல், பொறியியல் அறிவியல், பொருள்சார் அறிவியல், உயிரியல் அறிவியல், வேளாண்மை அறிவியல், புவி அறிவியல், தாவர அறிவியல், கணித அறிவியல், தகவல் மற்றும் தொடர்பு அறிவியல் போன்ற அறிவியல் பிரிவுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.      

இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம்

ஆங்கில ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்திருந்த நேச்சர் (Nature)  இதழின் ஆசிரியர் நார்மன் லோக்யெர் பிரிட்டீஷ் இந்தியாவில் அறிவியல் சங்கம் பற்றிய கருத்தை முதன் முதலில் வெளியிட்டார்.

1869-ஆம் ஆண்டு கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் மகேந்திரலால் சர்க்கார் தேசிய வளர்ச்சிக்கு அறிவியல் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்றும், இதற்காக வசதியாக ஆய்வகங்களை நிறுவ வேண்டும் என்றும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவோருக்கு  அரசாங்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தார்.

மேலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவர இதழ்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை செயல்படுத்தவேண்டியதன் கட்டாயத்தையும் எடுத்துரைத்தார். இந்த யோசனை 1876-இல் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான சங்கமாக உருவெடுத்தது.

19-ஆம் நூற்றாண்டில் இச்சங்கத்தில் ஒளியின் மின் காந்தக்கொள்கை மற்றும் ஒளியியல் பற்றி சொற்பொழிவாற்றிய அசுதோஷ் முகர்ஜி பின்னாளில் இந்திய அறிவியல் சங்கத்தை 1914-இல் தோற்றுவிக்க காரணமானார். அதே ஆண்டில் முதல் மாநாடு நடைபெற்றது.

1876-இல் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான சங்கம் தோற்றுவித்ததன் விளைவாக மிக குளிர்வு நிலை பௌதீக ஆராய்ச்சிகள் நிகழ்த்த வசதிபடைத்த ஆய்வகம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சர். சி. வி. ராமன் அந்த ஆய்வகத்தில் ஆராய்ச்சி நிகழ்த்த அழைக்கப்பட்டார்.

ஆய்வகங்கள் நிறுவப்பட்ட போதிலும் அதில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. இந்த காலகட்டத்தில் இந்திய கல்வியில் ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.

1901-ஆம் ஆண்டு சிம்லாவில் இந்திய கல்வி பற்றிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய கல்வி வளர்ச்சியை மேம்படுத்த சுமார் 150 சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இப்பரிந்துரைகளின் விளைவாக 1904-ஆம் ஆண்டு  வங்காளத்தின் வைசிராயான கர்சன் பிரபு இந்திய பல்கலைக்கழகச் சட்டத்தினை கொண்டுவந்தார்.

அதுவரை கல்வி கற்பிப்பது மட்டுமே வேலையாகக் கொண்டிருந்த பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது.

கல்வித் திட்டம் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. அதிக எண்ணிக்கை யிலான பேராசிரியர் மற்றும் விரிவுரை யாளர் காலியிடங்களை நிரப்பியது. 1910-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியின் வேதியியல் துறை தலைவரான ஜான்சி மன்சனும், கேனிங் கல்லூரியின் (லண்டன்) மக்மோகன் ஆகியோர் இந்தியாவில் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறாமல் இருப்பதைக் கண்டு பிரிட்டனின் அறிவியல் முன்னேற்ற சங்கம் போன்றதோர் அமைப்பு இந்தியாவிலும் ஏற்பட வேண்டுமென்று பரிந்துரைத்தனர்.

1914-ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் தலைவரான சர். அசுதோஷ் முகர்ஜி தலைமையில் இந்திய அறிவியல் சங்கம் துவங்கப்பட்டது. சங்கத்தின் முதல் பணி அன்றைய காலகட்டத்தின் அறிவியலர்களான சர். சி. வி. ராமனை பல்கலைக்கழகத்தின் பௌதிகத்துறை தலைவராகவும், வேதியியல் துறைக்கு டாக்டர் பிரபுல்லா சந்திரராயும்  நியமிக்கப் பட்டதே. ஆராய்ச்சியாளர்களின் ஊதியம்,ஆய்வக உபகரணங்கள் வாங்க தேவையான நிதி ஆகியவை அனைத்தும் நன்கொடை மூலமே பெறப்பட்டன.

1915-ஆம் ஆண்டு இரு கோளங்கள் மோதுவதால் ஏற்படும் ஒலி அலைகளைப் பற்றிய ஆய்வினை ராஸ்பிகாரி கோஷ் என்னும் ஆய்வாளர் வெற்றிகரமாக நிகழ்த்திய பிறகு, அறிவியல் சங்கத்தின் புகழ் பல்வேறு நாடுகளிலும் பரவத் துவங்கியது. இதனால் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்தும் அறிவியல் சங்கத்தின் ஆய்வகத்திலும் பல்கலைக்கழகத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் வரலாயினர்.

1918-ஆம் ஆண்டு முடிவில் முதல் உலகப் போருக்கு பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் போர்ப் படைகளுக்கு தேவையான காலணி, தோல் பொருட்கள், உடைகள் ஆகியவற்றை மனித வளம் அதிகமுள்ள இந்தியாபோன்ற காலனி நாடுகளைக் கொண்டு உற்பத்தி செய்யும் எண்ணத்தில் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தொடக்கம் குறித்தது. இதனால் அறிவியல் ஆராய்ச்சிகளின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கியது.

1914-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற்ற இந்திய அறிவியல் சங்கத்தின் பொதுக்குழுவில் மனிந்திரநாத் பானர்ஜியின் "அணுவின் தாக்கம்';  அசுதோஷ் டேயின் "மின் தடை பலகை மற்றும் நிலைமின் மீட்டர்'; டி.என். மாலிக்கின் "ஒளியியல் கொள்கை - ஒரு சுருக்கம்;சர்.சி.வி.ராமனின் "மீட்சி மோதலை பற்றிய புலன்விசாரணை' ஆகிய நான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளே சமர்ப்பிக்கப்பட்டன.

அசுதோஷ் முகர்ஜியின் தலைமையில் இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் 1914-இல் அமைக்கப்பட்ட பிறகு வேதியியல், பௌதிகம், விலங்கியல், மண்ணியல், தாவரவியல் எனப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்கட்டுரைகளை வெளியிட ஆராய்ச்சி இதழ்களும் இச்சங்கத்தால் தொடங்கப் பட்டன.

இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் வெள்ளிவிழா (25) அறிவியல் மாநாடு 1938-இல் கல்கத்தாவில் நடத்தப்பட்டது. இதற்கு ஜேம்ஸ் ஜுன்ஸ் தலைமை வகித்தார்.

இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் பொன்விழா (50) அறிவியல் மாநாடு 1963-இல் புதுடெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு பேராசிரியர் டாக்டர் கோத்ராய் தலைவராக விளங்கினார்.

இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் வைரவிழா (60-வது ஆண்டு) 1973-இல் டாக்டர் எஸ். பகத்வந்தம் தலைமையில் நடைபெற்றது.

இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் பிளாட்டினம் ஆண்டு விழா (75-வது ஆண்டு) மாநாடு 1988-இல் பூனாவில் நடைபெற்றது. இதற்கு பேராசிரியர் சி.என். ஆர். ராவ் தலைமை வகித்தார்.

இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழா (100-வது ஆண்டு) மாநாடு 2013-இல் கொல்கத்தாவில் நடைபெற்றது. டாக்டர் மன்மோகன் சிங் தலைமையேற்றார். இந்தியாவின் அறிவியல் எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு' (நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் ச்ர்ழ் ள்ட்ஹல்ண்ய்ஞ் ச்ன்ற்ன்ழ்ங் ர்ச் ஒய்க்ண்ஹ) என்ற கருத்தினை முன்நிறுத்தி நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை வெளியிடப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் சாரம்சம்:

    1. மக்களுக்காக அறிவியல் மற்றும் தொழில் நுட்பம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்காக மக்கள் என்ற மையக் கருத்தினைக் கொண்டுள்ளது.

    2. ஆராய்ச்சிப் பணிகளில் அரசின் பங்களிப்பு மட்டுமல்லாது தனியார் பங்களிப்பினையும் ஊக்கப்படுத்துவது.

    3. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப யுக்திகளை நவீனப்படுத்துவது மற்றும் தனியார் முதலீட்டைத் தூண்டுவது. இந்தியாவிற்கான உயர்தொழில்நுட்ப பாதையை அமைக்க அறிவியல், ஆராய்ச்சி மற்றும் நவீன அமைப்புகளை உருவாக்குவதும், 2020-ஆம் ஆண்டிற்குள் முதல் 5உலக அறிவியல் சக்திகளுள் ஒன்றாக இந்தியாவை கொண்டு வருவது.

திருப்பதியில் நடைபெற்ற 104-வது அறிவியல் மாநாட்டின் நோக்கமானது, 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மூன்றாவது நாடாக மாற்றுவது. மேக் இந்தியா வளர்ச்சிக்கு அறிவியல் ஆராய்ச்சிகளை வலிமைபடுத் துவது ஆகும்.

இந்த மாநாட்டில் 6 நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளும், 14,000 அறிவியலர்கள் மற்றும் அறிஞர்களும் கலந்து கொண்டனர். இந்திய அறிவியல் காங்கிரஸ் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். 1983-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் திருப்பதியில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment