Wednesday, January 20, 2016

கின்னஸ் புத்தகம் உருவானது எப்படி தெரியுமா? | GUINESS BOOK OF THE WORLD

உலகளவில் அதிகம் விற்பனையாகியுள்ள புத்தகம், கின்னஸ் புத்தகம். இதுவே ஒரு கின்னஸ் சாதனை தானே!

இந்த புத்தகம் உருவானது எப்படி தெரியுமா? உண்மையில் கின்னஸ் என்பது அயர்லாந்தை சேர்ந்த ஒரு பீர் கம்பெனி. 1759 முதல் இயங்கிவரும் இந்த பாரம்பரிய நிறுவனத்தில் 1946ல் சர் ஹக் பீவர் என்பவர் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார்.

பீவர் ஒருநாள் வேட்டைக்கு சென்றார். காட்டில் ‘கோல்டன் ப்ளோவர்’ என்ற பறவையை சுட்டார். அது துப்பாக்கி குண்டு வேகத்தையும் மிஞ்சி பறந்து தப்பியது.

அப்படியென்றால் ஐரோப்பாவிலேயே மிகவேகமாக செயலாற்றும் பறவை கோல்டன் ப்ளோவர் தானா என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. ஆனால் இதை உறுதி செய்யவோ மறுக்கவோ எந்த குறிப்பேடும் இல்லாதது அவருக்கு வருத்தத்தை தந்தது.

தானே அப்படி ஒரு புத்தகத்தை தயாரித்தால் என்ன என்று அவர் நினைத்தார்.அவர் வேலை பார்த்த கின்னஸ் நிறுவனமே அவரின் முயற்சிக்கு உதவியது.

அதன் பயனாக,  25/9/1955 ஆம் ஆண்டு  'GUINESS BOOK OF THE WORLD' என்ற பெயரில் 198 பக்கங்களுடன்  வெளிவந்தன.  ஆயிரம் பிரதிகள் மட்டுமே முதலில் அச்சடிக்கப்பட்டன. தற்போது 37 மொழிகளில் அச்சிடப்படும் கின்னஸ் புத்தகம்10 கோடி பிரதிகள் விற்பனை ஆகிறது.

No comments:

Post a Comment