Wednesday, January 20, 2016

TNPSC TAMIL : மயங்கொலி பிழைகளை கண்டறிதல்

TNPSC TAMIL : மயங்கொலி பிழைகளை கண்டறிதல்

ர, ற, ல, ள, ழ, ன, ந, ண  ஆகிய ஒலியில் மாறுபாடு உள்ள சொற்களின் ஒலி வேறுபாடறிந்து பொருளை அறிதல் இப்பகுதியாகும்.

லகர-ளகர  -ழகரச் சொற்களின் பொருள் வேறுபாடு
அலி ஆண், பெண் இல்லாமை
அளி கொடு, கருணை
அழி நீக்கு
ஒலி சத்தம்
ஒளி வெளிச்சம்
ஒழி நீக்கு
கலை ஓவியம்
களை வேண்டாத புல்
கழை மூங்கில்
காலை முற்பகல்
காளை எருது
குலம் குடி
குளம் நீர்நிலை
வேலை பணி
வேளை பொழுது
கலம் கப்பல்
களம் இடம்
கொல் கொலை செய்
கொள் பெற்று கொள்
தால் நாக்கு
தாள் பாதம்
தாழ் தாழ்ப்பாள்
வளி காற்று
வழி பாதை
வெல்லம் இனிப்பு
வெள்ளம் நீர்ப்பெருக்கு
கலி துன்பம்
கழி தடி
களி மகிழ்ச்சி
வாழை தாவர வகை
வாளை மீன் வகை
தலை உடல் உறுப்பு
தளை கட்டு
தழை இலை
வால் விலங்கின் உறுப்பு
வாள் கருவி
வாழ் உயிரோடிரு
உலவு நடமாடு
உளவு வேவு பார்த்தல்
உழவு பயிர் தொழில்
கல் கற்கள்
கள் மது
ஆல் ஆலமரம்
ஆள் நபர்
ஆழ் மூழ்கு
எல் சூரியன்
எள் எண்ணெய் வித்து
அலை கடல் அலை
அழை கூபிட்டு
அளை குகை
குளி நீராடு
குழி பள்ளம்
விளி அழை
விழி கண், கண் திற
ஆளி அரசன் , சிங்கம்
ஆழி கடல்
ஆள்வார் ஆட்சி செய்பவர்
ஆழ்வார் திருமால் அடியவர்
உளி கருவி
உழி இடம்
கிளவி சொல்
கிழவி முதியாள்
குலவி ஒன்று சேர்தல்
குளவி வண்டு வகை
குழவி குழந்தை
கூளம் குப்பை
கூழம் எள்
நாளி மூங்கில்
நாழி நாழிகை
இலை தழை
இளை மெலிதல்
இழை நூல்
உலை கொதிகலன்
உளை பிடரி மயிர்
உழை உழைத்தல், மான்

ரகர - றகரப் பொருள் வேறுபாடு
அரை பாதி
அறை வீட்டின் உள்ளிடம்
அரிவை பெண்
அறிவை தெரிந்து கொள்
இரங்கு கருணை கொள்
இறங்கு கீழே இறங்கு
இரை தீனி
இறை கடவுள்
இரும்பு உலோகம்
இறும்பு புதர்
உரல் மாவிடிக்கும் உரல்
உறள் பொருத்துதல்
உரவு வலிமை, உப்பு
உறவு தொடர்பு, கலந்து வாழ்தல்
ஒரு ஒன்று
ஒறு தண்டித்தல்
கரை ஓரம்
கறை அழுக்கு
கூரை வீட்டின்மேற்பகுதி
கூறை ஆடை
கூரிய கூர்மையான
கூறிய சொல்லிய படி
குரங்கு விலங்கு
குறங்கு தொடை
குரவர் சமயப் பெரியவர்கள்
குறவர் பழங்குடியினர்
பரவை கடல்
பறவை பறக்கும் உயிரினம்
அரம் கருவி
அறம் தருமம்
அரி நறுக்கு
அறி தெரிந்து கொள்
ஆர நிதானம்
ஆற சூடு தணிய
இரத்தல் யாசித்தல்
இறத்தல் சாதல்
உரு வடிவம்
உறு மிகுதி
உரை பேச்சு
உறை மூடி
ஏரி பெரிய குளம்
ஏறி மேலே ஏறி
எரி தீ
எறி வீசு
கரி அடுப்புக்கரி, யானை
கறி காய்கறி
குரை நாய் குரைத்தல்
குறை சுருக்குதல்
செரித்தல் உணவு சீரணமாகுதல்
செறித்தல் திணித்தல்
தரி அணிந்து கொள்
தறி வெட்டு
திரை அலை
திறை கப்பம்
நிரை வரிசை
நிறை நிறைத்து வைத்தல்
பரந்த பரவிய
பறந்த பறவை பறந்த
பரி குதிரை
பறி பிடுங்கு
பொரு போர் செய்தல்
பொறு பொறுத்துக் கொள்
பொரி நெல் பொரி
பொறி இயந்திரம்
பெரு பெரிய
பெறு அடை
துரவு கிணறு
துறவு துறந்து விடுதல்
மரம் தாவரம்
மறம் வீரம்
வருத்தல் துன்புறுத்தல்
வறுத்தல் காய்களை வறுத்தல்
விரல் கை விரல்
விறல் வெற்றி
சொரி பொழிதல்
சொறி அரிப்பு (சிரங்கு வகை)
புரம் நகர்
புறம் வெளி
மாரி மழை
மாறி வேறுப்பட்டு
ஊர நகர
ஊற சுரக்க
அரு அரிய
அறு வெட்டு, துண்டி
அருகு பக்கம்
அறுகு ஒரு புல்
அருந்து குடி, சாப்பிடு
அறுந்து அறுபட்டு
அலரி ஒரு வகை பூ
அலறி கதறி
இரு உட்கார்
இறு அறு

னகர -  ணகரச் சொற்களின் பொருள் வேறுபாடு
அன்னம் பறவை
அண்ணம் மேல்வாய்
ஆனை யானை
ஆணை கட்டளை
உன் உன்னுடைய
உண் சாப்பிடு
காண் பார்
கான் காடு
தன்மை இயல்பு
தண்மை குளிர்ச்சி
நான் யான்
நாண் கயிறு
பனி குளிர்
பணி வேலை
மனம் உள்ளம்
மணம் நறுமணம்
வன்மை உறதி

வண்மை
ஈகை
ஊன் மாமிசம்
ஊண் உணவு
கன்னன் கர்ணன்
கண்ணன் கிருஷ்ணன்
தின்மை தீமை
திண்மை வலிமை
கன்னி பெண்
கண்ணி அரும்பு, பூமாலை
கனி பழம்
கணி எண்ணுவாயாக

நகர – னகரச் சொற்களின் பொருள் வேறுபாடு
முந்நாள் மூன்று நூல்
முன்னாள் முந்தைய நூல்
முந்நூல் மூன்று நூல்
முன்னூல் முதல் நாள்
நந்நூல் நமது நூல்
நன்னூல் நல்ல நூல்
அந்நாள் அந்த நாள்
அன்னாள் அப்பெண்
எந்நாள் எந்த நாள்?
என்னாள் எனது நாள்
தேநீர் குடிக்கும் தேநீர்
தேனீர் தேன் கலந்த நீர்

No comments:

Post a Comment