Monday, August 26, 2013

சொற்பொருள் அறிவோம்

,ந,ன வேறுபாடுள்ள சொற்கள்:
அரண்  மதில், பாதுகாப்பு கோட்டை, அரன், சிவன்
அண்ணம்  மேல்வாய்
அன்னம்  ஒரு பறவை
ஆணி  கூரிய இரும்புத் துண்டு
ஆனி  ஒரு மாதம்
ஆணை  கட்டளை
ஆனை  யானை
உண்ணு  சாப்பிடு
உன்னு  நினைத்துப் பார்
ஊண்  உணவு
ஊன்  இறைச்சி
எண்ண -  நினைக்க, எண்ணிப் பார்க்க
என்ன  கேள்வி
கணை  அம்பு
கனை  கனைத்தல்
கணம்  நேரம்
கனம்  பளு, சுமை
காண்  பார்
கான்  காடு
தணி  அடங்கு
தனி  தனிதிருத்தல்
துணி  சீலை
துனி  துன்பம், கோபம், அச்சம்
திணை  நிலம், ஒழுக்கம்
தினை  தானிய வகை
நாண்  கயிறு, நாணம்
நான்  தன்னைக் குறிப்பது, தன்மை இடப்பெயர்
திண்மை  வலிமை
தின்மை  தீமை
வண்மை  வளம், வழங்குதல்
வன்மை  வலிமை

No comments:

Post a Comment