அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அடைமொழியால் குறிப்படுபவர் யார் என கேள்விகள் ஒன்று அல்லது இரண்டு இடம்பெறும். உதாரணமாக தமிழ்நாட்டு பெர்னாட்ஷா யார் என கேள்வி இடம்பெற்று அதற்குரிய விடைகளாக நான்கு வெவ்வேறு பெயர் கொடுத்திருப்பார்கள். அவற்றில் சரியான, அடைமொழிக்குரிய சான்றோரின் பெயரைத் தேர்ந்தெடுத்து விடையளிக்க வேண்டும்.

இதில் சரியான விடைகளைப் போல தோற்றமளிக்கும் விடைகளையும் கொடுத்திருப்பார்கள். நன்கு யோசித்து கேள்வியைப் புரிந்துகொண்டு விடையளிக்க வேண்டும். இப்படி விடைகளை ஒன்றுக்கு இரண்டு முறை கவனித்து விடையளித்தால் தேர்வில் வெற்றிப்பெறுவது உறுதி.


கீழ்க்கண்ட உதாரணங்களிலிருந்து ஒரு கேள்வியைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டுப் பெர்னாட்ஷா என மு. வரதராசனார் அவர்களையும், தென்னாட்டு பெர்னாட்ஷா என அறிஞர் அண்ணாவை குறிப்பிடுவோம். இதில் குழப்பமடையாமல் யார் தமிழ்நாட்டு பெர்னாட்ஷா, யார் தென்னாட்டு பெர்னாட்ஷா என சிந்தித்து சரியான , உரிய விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுபோன்ற குழுப்பமான கேள்விகளைப் படித்து தெளிந்து விடையளிக்கப் பழகிக்கொண்டால் TNPSC நடத்தும் VAO, Group IV, மற்றும் GROUP II ஆகிய தேர்வுகளில் எளிதாக வெற்றிவாகை சூடலாம்.

கீழிருக்கும் அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் பட்டியலைப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் இவை உங்களுக்கு தேர்வில் ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.


தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார்
நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா
தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - பாரதிதாசன்
கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை
குழந்தைக் கவிஞர் - அழ. வள்ளியப்பா
தொண்டர் சீர்பரவுவார் - சேக்கிழார்
கவிச்சக்ரவர்த்தி - கம்பன்
விடுதலைக்கவி , தேசியக்கவி - பாரதியார்
தமிழ்த்தென்றல் - திரு.வி.க.
ஆளுடை நம்பி - சுந்தர்ர்
ஆட்சி மொழிக் காவலர் - இராமலிங்கனார்
கிருத்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
இரா. பி. சேதுபிள்ளை - சொல்லின் செல்வர்
மூதறிஞர் - இராஜாஜி
பேரறிஞர் - அண்ணா
பகுத்தறிவுப் பகலவன் - பெரியார்
செக்கிழுத்த செம்மல் - வ.உ.சி.
தசாவதானி - செய்குத் தம்பியார்
இசைக்குயில் - எம்.எஸ். சுப்புலட்சுமி
மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாசர்
பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்
கல்வியிற் பெரியவர் - கம்பர்
சிறுகதை மன்னன் - புதுமைபித்தன்
திருவாதவூரார் - மாணிக்க வாசகர்
முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விசுவநாதம்
******

நன்றி நண்பர்களே..!

Post a Comment

2 Comments

  1. life is about learning by the base of concept we provide studela. for the learning people it is very useful one. In studela we provide a video for maths coaching, science projects,bank exam, IAS exam,TNPSC group exam,RRB exam, other compatative exam, kids learning videos and some technology videos are availabe. watch more videos get your view smart

    ReplyDelete
  2. உவமை புலவர் - சுரதா

    ReplyDelete