Wednesday, August 2, 2023

தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான நூலகங்கள் || TNPSC TAMIL TIPS

தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான நூலகங்கள் || TNPSC TAMIL TIPS




1. இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று எது?

Answer: தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

2. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு கூறுகிறது?

Answer: கி. பி. 1122

3. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் காணப்படுபவை?

Answer: ஓலைச்சுவடி, ஓவியங்கள், கையெழுத்துப் படிகள்

4. தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

Answer: தஞ்சாவூர்

5. தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

Answer: 1981

6. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டது?

Answer: ஆயிரம் ஏக்கர்

7. வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது 'தமிழ்நாடு 'எனத் தெரியும் வகையில் கட்டப்பட்ட அமைப்பு உள்ள பல்கலைக்கழகம் எது?

Answer: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கம்?

8. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள புலன்களின் எண்ணிக்கை?

Answer: 5 (கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம்)

9. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் எத்தனை துறைகள் உள்ளன?

Answer: 25

10. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மற்றொரு சிறப்பு என்ன?

Answer: சித்தமருத்துவத் துறை மூலம் பொது மக்களுக்கு மருத்துவவசதி

11. இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது?

Answer: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்

12. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எங்கு கல்வி கற்று வருகின்றனர்?

Answer: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்

13. உ. வே. சா நூலகம் எங்கு உள்ளது?

Answer: சென்னை

14. உ. வே. சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

Answer: 1942

15. உ. வே. சா நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன?

Answer: 2128

16. உ. வே. சா நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன?

Answer: 2941

17. கீழ்த்திசை நூலகம் எங்கு உள்ளது?

Answer: சென்னை

18. கீழ்த்திசை நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?

Answer: 1869

19. கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்த தளத்தில் இயங்கி வருகிறது?

Answer: 7 வது தளம்

20. கன்னிமாரா நூலகம் எங்கு உள்ளது?

Answer: சென்னை

21. கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

Answer: 1896

22. தமிழ்நாட்டில் மைய நூலகம் எது?

Answer: கன்னிமாரா நூலகம்

23. கன்னிமாரா நூலகத்தில் எத்தனை இலட்சத்திற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளது?

Answer: ஆறு இலட்சத்திற்கு மேல்

24. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது?

Answer: கன்னிமாரா நூலகம்

25. கன்னிமாரா நுலகத்தில் எந்த தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது?

Answer: மூன்றாவது தளம்


No comments:

Post a Comment