எட்டாம் வகுப்பு இயல் இரண்டு திருக்குறள் || tnpsc group4
1.முதற்பாவலர்,பெருநாவலர்,நாயனார் என்று அழைக்கப்படுபவர்? திருவள்ளுவர்
2.திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர் ?2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
3.திருக்குறளில் உள்ள மூன்று பகுப்புகள் ?அறம், பொருள் ,இன்பம்
4.அறத்துப்பாலில் உள்ள இயல்கள்? (4) பாயிறவியல், இல்லறவியல், துறவறவியல் ,ஊழியல்.
5.பொருட்பாலில் உள்ள இயல்கள் ? (3)அரசியல், அமைச்சியல், ஒழிபியல்
6.இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள்? (2) களவியல், கற்பியல்
7.புகழாலும் பழியாலும் அறியப்படுவது ? நடுவுநிலைமை
8.பயனில்லாத கலர் நிலத்திற்கு ஒப்பானவர்கள் ? கல்லாதவர்.
9."கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து' என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?பிறிது மொழியில் அணி
10."வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ? உவமை அணி
11."சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ? உவமை அணி
12."வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ? இல் பொருள் உவமை அணி
No comments:
Post a Comment