Thursday, August 31, 2023

TNPSC குரூப் 4 EXAMல எந்த பாட பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!!

 TNPSC குரூப் 4 EXAMல எந்த பாட பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!!

tnpsc group4 study tips


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு விதமான தீர்வுகளை நடத்தி வருகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 என்ற எக்ஸாம் மட்டுமே அதிக நபர்களால் எழுதப்படுகிறது ஏனென்றால் அதுக்கு தகுதி பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் மட்டும் போதுமானது.

ஆதலால் அந்த தேர்வுக்கு அதிக நபர்கள் விண்ணப்பிக்கிறார்கள் மற்றும் அதிக நபர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

வெற்றி பெற்ற தேவர்கள் கூறும் அறிவுரையானது முதலில் தாங்கள் எழுதும் தேர்வுக்கு என்னென்ன பாடப்பகுதிகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் எந்த பாடப்பகுதிக்கு அதிகம் எதிர் பெண்கள் கொடுக்கிறார்கள் என்பதை தெரிந்து இருக்க வேண்டும்.

நாம் இப்பொழுது குரூப் 4 தேர்வுக்கு தேவையானவற்றை பற்றி பார்ப்போம் மற்றும் எவ்வாறு எளிதாக வெற்றி அடைவது என்பதை பற்றி குறிப்பிடுகிறோம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 300 ஆனால் அதில் கேட்கப்படும் கேள்விகள் 200. ஏனென்றால் அதில் ஒவ்வொரு வினாக்கும் 1.5 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் பாடப்பகுதி மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்,

1. பொதுத் தமிழ்.

2. கணிதம்.

3. பொது அறிவு

பொது தமிழில் 100 வினாக்களும் கணிதத்தில் 25 வினாக்களும் வருவது அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் அனைத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளிலும் இந்த முறையில் தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பொது தமிழில் எளிதாக மதிப்பெண் இருக்கலாம் அதற்கு சிறந்த வழி இலக்கணம் மற்றும் ஒன்பதாம் ,பத்தாம் வகுப்பு பாட தமிழ் புத்தகங்களை அதிகளவு படித்தாலே போதுமானது. எனில் கடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது அதிக வினாக்கள் 9 மற்றும் 10 வகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

கணிதத்தில் அனைவராலும் முழு மதிப்பெண் எடுக்க இயலும் அவ்வாறு எடுக்க வேண்டும் என்று எண்ணினால் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து கணித வினாக்களையும் பயிற்சி செய்து பார்க்கவும் இவ்வாறு பயிற்சி செய்வது மற்றும் முந்தைய வினாத்தாள்களில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்தாலே தாங்கள் கணிதத்தில் 25 மதிப்பெண்களுக்கு 23 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வாய்ப்புள்ளது.

மீதமுள்ள 75 வினாக்கள் பொது அறிவில் இருந்து கேட்கப்படுகின்றன.

பொது அறிவில் இருந்து 40% கேள்விகள் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் சமூக அறிவியல் பாடப் பகுதியில் இருந்து 30% வினாக்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு கேட்கப்படுகின்றன.

பேசி குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் முதலில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் நன்றாக படியுங்கள் பின்னர் தங்களுக்கு நேரம் கிடைத்தால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் உள்ள தமிழ் அரசியல் அறிவியல் பொருளாதாரம் புவியியல் ஆகிய பாடப்பகுதிகளை படியுங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு எந்த பாடப்பகுதி மிகவும் பிடித்தமான பாடப்பகுதி என்று தேர்ந்தெடுத்து அதனை முதலில் படித்து முடியுங்கள் ஏனெனில் அவ்வாறு படைத்தால் மட்டுமே எளிதாக எளிதாக பாடப்பகுதியை முடிக்க இயலும் ஏனென்றால் இன்னும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் உள்ளன தேர்வர்கள் அறிவிப்பு வந்த பின்பு படித்து விடலாம் என்று நினைத்தால் அது முடியாத காரியம் ஆகும்.

படித்தால் மட்டும் போதாது படித்த பாடங்களை அடிக்கடி ரிவிஷன் செய்து கொண்டு வந்தால் மட்டுமே அது மனதில் எளிதாக நிற்கும் மற்றும் அது தேர்வு எழுதும் போது தங்களுக்கு உதவி புரியும்.

தங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.








No comments:

Post a Comment