எட்டாம் வகுப்பு இயல் 6 இலக்கணம் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 1 || TNPSC EXAM
1. இரண்டு சொற்களில் முதலில் உள்ள சொல்லை நிலை மொழி என்று அழைப்பர்.
2. இரண்டு சொற்களில் முதல் சொல்லுடன் வந்து சேரும் சொல்லை வருமொழி என்று கூறுவர்.
3. நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவதை புணர்ச்சி என்கிறோம்.
4. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது உயிரீற்றுப் புணர்ச்சி.
5. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது மெய்யீற்று புணர்ச்சி.
6. வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது உயிர் முதல் புணர்ச்சி.
7. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது மெய்முதல் புணர்ச்சி.
8. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்று இணைவது இயல்பு புணர்ச்சி.
9. இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு
தாய் + மொழி = தாய்மொழி.
10. இரண்டு சொற்கள் இணையும் போது நிலை மொழியிலோ வருமொழியிலோ இரண்டிலும் மாற்றங்கள் நிகழும் ஆயின் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
11. விகார புணர்ச்சி எத்தனை வகைப்படும் மூன்று.
12. விகாரப் புணர்ச்சியின் மூன்று வகைகள் தோன்றல், திரிதல், கெடுதல்.
13. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது தோன்றல் விகாரம்.
14. விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு
உடல் + ஓம்பல் = உடலோம்பல்.
15. தோன்றல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு
தமிழ் + தாய் = தமிழ்த்தாய்.
No comments:
Post a Comment