Monday, August 14, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 இலக்கணம் பகுதி 1 || TNPSC EXAM

 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 இலக்கணம் பகுதி 1 || TNPSC EXAM

8th tamil iyal4


1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை எவ்வாறு அழைப்பர் வேற்றுமை.

2. பெயர்ச்சொல் உடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபுகள் என்று கூறுவர்.

3. வேற்றுமை எட்டு வகைப்படும்.

4. முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உறுப்புகள் இல்லை.

5. முதல் வேற்றுமையின் வேறு பெயர் எழுவாய் வேற்றுமை.

6. எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளை தருவது முதல் வேற்றுமை.

7. ஒரு பெயரை செயப்படுபொருளாக வேறுபடுத்தி காட்டுவது இரண்டாம் வேற்றுமை.

8. இரண்டாம் வேற்றுமையின் வேறு பெயர் செய்படுபொருள் வேற்றுமை.

9. இரண்டாம் வேற்றுமை உருபு .

10. இரண்டாம் வேற்றுமை உருபு ஆறு வகையான பொருள்களில் வரும்.

11. இரண்டாம் வேற்றுமை ஆக்கல். அளித்தல், அடைதல், நீத்தல் ஒத்தல், உடைமை ,ஆகிய ஆறு வகையான பொருள்களில் வரும்.

12. சில இடங்களில் உறுப்புகளுக்கு பதிலாக முழு சொற்களை வேற்றுமை உருவாக வருவதும் உண்டு இதனை சொல்லுருபுகள் என்பர்.

13. வேற்றுமை உருபுகள் இடம்பெற்றுள்ள தொடர்களை வேற்றுமை தொடர்கள் என்பர்.

14. வேற்றுமை உருபுகள் இடம்பெற வேண்டிய இடத்தில் மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைதொகை என்பர்.

15. மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு.

16. மூன்றாம் வேற்றுமைக்கு  உருபுகள் 4.

17. ஆல் ,ஆன் ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.

18. ஓடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடன் நிகழ்ச்சி பொருளில் வரும்.

19. கருவிப்பொருள் எத்தனை வகைப்படும் 2.

20. கருவிப்பொருள் முதற்கருவி, துணைக்கருவி என இரு வகைப்படும்.

21. கருத்தப்பொருள் எத்தனை வகைப்படும் இரண்டு.

22. கருத்தா பொருள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இரு வகைப்படும்.

23. கருவியை செய்யப்படும் பொருளாக மாறுவது முதல் கருவி.

24. ஒன்றை செய்வதற்கு துணையாக இருப்பது துணைக் கருவி.





No comments:

Post a Comment