ஆண்டாள் பற்றிய முக்கிய குறிப்புகள் | TNPSC EXAM POINT OF VIEW
*பிறந்த ஊர் - ஸ்ரீவில்லிபுத்தூர்
*காலம் - 9 ஆம் நூற்றாண்டு
*அம்சம் - பூமகள் அம்சம்
*இயற்றிய நூல்கள் - திருப்பாவை, திருமொழி
சிறப்புப் பெயர்கள் - கோதை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, நாச்சியார், ஆண்டாள்
*சிறப்புகள்:*
✓ பெரியாழ்வாரின் வளர்ப்பு மகன் - ஆண்டாள் ( பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி என போற்றப்பட்டவன்).
✓ நந்தவனத்தில் ( துழாய்) செடிகளுக்கிடையே கண்டெடுக்கப்பட்ட குழந்தை - ஆண்டாள்.
✓ திருமாலுக்கு மாலைகட்டிக் கொடுத்ததால் கோதை எனப்பட்டாள்.
✓ சூடிக் கொடுத்ததால் சூடிக் கொடுத்த சுடர்கொடி எனப்பட்டாள்.
✓ இறைவனுக்கு மனைவியானதால் நாச்சியார் எனப்பட்டாள்.
✓ ஆண்டவனையே ஆண்டதால் ஆண்டாள் எனப்பட்டாள்.
✓ ஆண்டவனை எழுப்பித் தன் குறையைத் தானே சொன்னவள் ஆண்டாள்.
✓ இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணமான இடம் திருவரங்கம்.
No comments:
Post a Comment