மூவலூர் இராமாமிர்தம் பற்றிய முக்கிய குறிப்புகள் மற்றும் வினாக்கள்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1883-ல் பிறந்தார்.
- அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தின் அன்னிபெசன்ட் எனப் புகழப்பட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள்.
- அவர் தேவதாசி முறையை எதிர்த்து பேராடினார். 1917-ல் தனது முதல் போராட்டத்தை துவக்கினார்.
- அம்மையார் காந்தியத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் விடுதலை வேட்கையும் கொண்டிருந்தார்.
- இவர் 1938-ம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் பெரிதும் பங்காற்றினார். அம்மையார் பெண் உரிமைக்காக பாடுபட்ட விடிவெள்ளியாக திகழ்ந்தார். தமது 80 வயதில் 27.06.1962-ம் ஆண்டு இல்வுலக வாழ்வை நீத்தார். திருமண உதவி திட்டத்தை அம்மையார் பெயரில் தமிழக அரசு 1989 முதல் வழங்கி வருகிறது.
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் "புதுமைப் பெண்" திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை கிடைக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்தப் "புதுமைப் பெண்" திட்டம்.
No comments:
Post a Comment