Saturday, November 19, 2022

TNPSC தேர்வுக்கான மொத்த காலியிடம் அறிவிப்பு..!

tnpsc exam news

நம்மில் பலருக்கு அரசு வேலை வாங்க வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கும். அதனால் தான் ஆண்டுதோறும் நடைபெறும் அரசு பணிகளுக்கான தேர்வில் லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொள்கின்றனர். அந்த வகையில், தமிழக அரசால் நடத்தப்படும் TNPSC (PSC – Public Service Commission) தேர்வு மிகவும் பிரபலமானது. 

ஏனென்றால், தமிழக அரசு வேலைக்கு முயற்சிக்கும் அனைவரும் TNPSC தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு வேலை பெற முடியும். 2022 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


TNPSC குரூப் 1, 2, 2A , 4 :


இந்த ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அரசு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய முடியுமா என்பது சந்தேகத்தில் உள்ளது. 

இதற்கு மத்தியில், அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு TNPSC தேர்வு எழுத காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அது என்னவென்றால் , வரும் ஆண்டில் குரூப் 1, 2, 2A , 4 போன்ற பதவிகளுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


TNPSC 2023 தேர்வு திட்டம் மார்ச் மாதம் வெளியாகலாம்:

2023 ஆம் ஆண்டுக்கான TNPSC ஆண்டு தேர்வு திட்டம் மார்ச் மாதம் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

மற்ற முறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் , கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) :

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய TNPSC பல்வேறு போட்டித்தேர்வுகளையும், நேர்காணலையும் நடத்தி வருகிறது. 

அந்த வகையில், குரூப் 1, குரூப் 2 & 2A , குரூப் 3, குரூப் 4 என குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. TNPSC தேர்வை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முதல் 35 வயது வரை உள்ளவர்கள் எழுதலாம். அரசு விதிகளின்படி, சிறப்பு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

No comments:

Post a Comment