தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு நாளை மறுநாள் (19.11.2022) நடைபெற உள்ளது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் உடனடியாக தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தேர்வு நாள்: 19.11.2022 ( சனிக்கிழமை) முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை
அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
1. அனுமதி சீட்டு அஞ்சல்மூலம் அனுப்பப்படமாட்டாது.
2. விண்ணப்பத்தாரர்கள் https://www.tnpsc.gov.in/ என்கிற இணையதள முகவரி மூலம் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
3. முகப்பு பக்கத்தில் 'நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்' (Hall Ticket Download) என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. 'நிரந்தரபதிவு விவரங்கள்' One time Registration and Dashboard என்ற இணைப்பின் மூலம் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை சமர்ப்பித்து உள்நுழையுங்கள்.
5. விண்ணப்பிப்பதாரரின் விவரங்கள் காட்டப்படும். அதில், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்' (Hall Ticket Download) என்ற இணைப்பைக் கிளிக் செய்யுங்கள். அதற்கு முன்னதாக, 'Current Application'-ல் உள்நுழைந்தது உங்கள் விண்ணப்ப பதிவு எண்ணை தெரிந்து கொள்ளுங்கள்.
6. Download HallTicket: நீங்கள் விண்ணப்பித்த தேர்வுகளின் பட்டியல் விவிரங்கள் இருக்கும். Combined Civil Services Examination - I வரிசையில் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
7. விண்ணப்ப பதவி எண், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை சமர்ப்பித்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். விண்ணப்ப பதிவு எண் குறுஞ்செய்தி(SMS)/மின்அஞ்சல் முகவரி (e.mail) மூலம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கும்.
8. அனுமதி சீட்டில் ஏதேனும் பிழையோ, திருத்தமோ செய்ய வேண்டுமெனில், அனுமதிச் சீட்டினை பெற்றவுடன் விண்ணப்பதாரர், தேர்வாணைய அலுவலகத்திற்கு திருத்தத்திற்காக உடனடியாக மின்னஞ்சல்/கைப்பேசி மூலம் தெரிவிக்க வேண்டும்.
9. அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படும். அனுமதிச் சீட்டு இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
10. தேர்வுக்கு இன்னும் 48 மணி நேரங்களுக்கும் குறைவான நேரம் இருப்பதால், விண்ணப்பதாரர்கள் நேரம் காலம் தாழ்த்தாமல் போதிய கால அவகாசம் இருக்கும் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment